ETV Bharat / state

Madurai Train Fire Update : உத்தரபிரதேசம் - ராமேஸ்வரம் சுற்றுலா ரயில் தீ விபத்து - 9 பேர் பலி! - மதுரை ரயில் விபத்து

Madurai Train Fire Accident : மதுரை ரயில் நிலையம் அருகே நின்று இருந்த உத்தரபிரதேசம் - ராமேஸ்வரம் சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 சுற்றுலா பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.

train
train
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 8:47 AM IST

Updated : Aug 26, 2023, 8:55 AM IST

மதுரை: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த சுற்றுலா ரயில், மதுரை ரயில் நிலையத்தில் நின்று போது திடீரென தி விபத்து ஏற்பட்ட நிலையில், தீ விபத்தில் சிக்கி முதியவர்கள் உள்பட 9 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சாமி தரிசனம் செய்வதற்காக 60க்கும் மேற்பட்டோர் ஆகஸ்ட் 17ஆம் தேதி யாத்திரைப் பயணிகள் ரயில் மூலமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். நாகர்கோயில் பத்மநாப சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று (ஆகஸ்ட். 26) அதிகாலை மதுரை வந்தடைந்தனர்.

சுற்றுலா ரயில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மதுரை போடி லயனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் ரயில் பெட்டியில் இருந்த பக்தர்கள் சிலிண்டர் மூலம் சமைக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரயிலில் தேநீர் தயாரிக்க முற்பட்ட போது, இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து யாத்திரை பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கி உள்ளனர். இதில் 50க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள், ரயிலை விட்டு கீழே இறங்கி விட்டதாகவும் சிலர் ரயிலில் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தீயணைப்பு துறையினர் ரயில் பெட்டியினை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் 9 பேர் தீயில் எரிந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும், எஸ்எஸ் காலனி காவல் நிலைய போலீசாரம் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு நிலவரத்தை கேட்டறிந்தனர். மேலும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து காயம் அடைந்த சக பயணிகளிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார்.

20க்கும் மேற்பட்டவர்கள் விபத்தில் படுகாயம் அடைந்திருப்பதாக கூறப்படும் நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : Madurai Train Fire : சுற்றுலா ரயிலில் திடீர் தீ விபத்து... 8 பயணிகள் பலி! கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து?

Last Updated : Aug 26, 2023, 8:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.