ETV Bharat / state

மதுரையில் இன்று புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று - Madurai corona infection Source

மதுரை: புதிதாக 11 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அரசு பல்நோக்கு மருத்துவமனை
அரசு பல்நோக்கு மருத்துவமனை
author img

By

Published : May 16, 2020, 2:48 PM IST

மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை விரிவாக்க கட்டடத்தின் எதிரே இயங்கிவரும் அரசு பல்நோக்கு மருத்துவமனை கட்டடத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (மே 15) வரை 132 பேர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று புதிதாக மகாராஷ்டிராவில் இருந்து மதுரை திரும்பிய 5 பேர் உள்பட 11 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வரை மொத்தம் 143 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிகிச்சைப் பலனின்றி இருவர் உயிரிழந்த நிலையில், 87 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 54 பேர் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில், பாதிக்கப்பட்ட அல்லது பரிசோதனைக்கு வருகின்ற நோயாளிகளை தவிர அதிக நபர்கள் வருவதைத் தடுக்க அந்த மருத்துவமனையை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக சுகாதாரத் துறையும் மதுரை மாநகராட்சியும் அறிவித்துள்ளன. இதனால் அப்பகுதி முழுவதும் காவல் துறையின் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனையின் கரோனா வார்டில் விஜய பாஸ்கர் திடீர் ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.