ETV Bharat / state

மதுரை - காசி "உலா ரயில்" சேவை மதுரை ரயில் நிலையத்திலிருந்து தொடக்கம் - உலா ரயில்

மதுரை - காசி "உலா ரயில்" சேவை இன்று மதுரை ரயில் நிலையத்தில் தொடங்கியது.

மதுரை - காசி  "உலா ரயில்" சேவை இன்று மதுரை ரயில் நிலையத்தில் இருந்து துவங்கியது

author img

By

Published : Jul 23, 2022, 10:51 PM IST

மதுரை: பயணிகள் வசதிக்காக மதுரையிலிருந்து காசி வரை தனியார் நிறுவனம் சார்பில் ”உலா ரயில்” ரயில் இயக்கப்படுகிறது. இந்த சுற்றுலா ரயிலில் 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 சமையல் பெட்டிகள், இரண்டு சரக்கு பெட்டிகள் உள்ளன. வசதிகளுக்கு ஏற்ப ஒருவருக்கு மூன்று வகை கட்டணங்கள் முறையே ரூ. 21,500/-, ரூ.23600/- ரூ.31400/- என வசூலிக்கப்படுகிறது.

மதுரை - காசி
மதுரை - காசி "உலா ரயில்" சேவை இன்று மதுரை ரயில் நிலையத்தில் இருந்து துவங்கியது

இந்த ரயில் சேவையை மத்திய விவகாரம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியும், மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் தன்வே ராவ்சாஹேப் தாதராவும் இன்று மதுரையிலிருந்து காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து இந்த ரயில் மதுரையிலிருந்து புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர், விஜயவாடா வழியாக காசி செல்கிறது.

இந்த ரயில் ஏழு சக்தி பீடங்களான ஆந்திர மாநில பீதாம்புரம் புருகுதிகா தேவி, பூரி பிமலாதேவி, ஜஜ்பூர் பிரஜா தேவி, கொல்கத்தா காளி, கயா மங்கள கௌரி, காசி விசாலாட்சி, பிரயாக்ராஜ் அலோப் தேவியை தரிசித்து பாதகயா, நாபிகயா, ஆடி அமாவாசை அன்று சிரோ கயாவில் வரை செல்கிறது.

பின் பூரி ஜெகநாதர் கோவில் மற்றும் கொனார்க் சூரிய கோவில், கொல்கத்தா பேலூர் மடம், விக்டோரியா மெமோரியல், விஷ்ணு பாத தரிசனம், காசி கங்கையில் புனித நீராடி ஸ்ரீ காசி விஸ்வநாதர், ஸ்ரீ அன்னபூரணி தரிசனம் இறுதியாக நாகபஞ்சமி தினத்தன்று விஜயவாடா கிருஷ்ணா நதியில் நீராடி கனகதுர்கா தரிசனத்துடன் ரயிலின் சுற்றுலா நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் சிவப்பிரசாத் கூறுகையில், உலா ரயில் மூலம் மதுரையில் இருந்து காசி வரையில் செல்லும் ரயிலில் பயணிகள் ஆர்வமுடன் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து பொதுமக்களின் தேவைக்கேற்ப அடுத்தடுத்த முயற்சியாக சீரடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு உலா ரயில்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம். பயணிகளுக்கு 100% பாதுகாப்பை உறுதிப்படுத்தி, நவீன வசதிகளுடன் கூடிய சிறப்பு ரயிலாக இது திகழ்கிறது எனத் தெரிவித்தார்.

இதையடுத்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் பேசுகையில், உலா ரயில் தனியாருக்கு சொந்தம் என்பது முக்கியமில்லை. சுற்றுலா ரயில்கள் ஏற்கனவே ஐஆர்சிடிசி மூலம் இயக்கப்பட்டு வந்த நிலையில் அவற்றிற்கு போட்டியாகவும் மக்களின் பயன்பாட்டிற்காகவும் அதேவேளையில் சுற்றுலா நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டும் இயக்கப்பட்டு வருகிறது என்றார்.

இதையும் படிங்க: உள்ளாட்சி விதிகளில் மாற்றம்…! ஊராட்சி தலைவரின் உரிமை பறிபோகிறதா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.