மதுரை: நேற்று (மே27) முதன் முதலாக இயக்கப்பட்ட மதுரை தேனி விரைவு சிறப்பு ரயிலில் 574 பேர் பயணம் செய்துள்ளனர். மதுரையில் இருந்து வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி ஆகிய ரயில் நிலையங்களுக்கு முறையே 19, 31, 33, 273 பயணிகள் பயணச்சீட்டு பெற்றுள்ளனர். அதன் மூலம் பெற்ற வருமானம் ரூபாய் 14 ஆயிரத்து 940 ஆகும்.
வடபழஞ்சியிலிருந்து உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி ஆகிய ரயில் நிலையங்களுக்கு முறையே 7, 10, 27 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூபாய் 1,590 வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. உசிலம்பட்டியில் இருந்து தேனிக்கு 109 பயணிகள், ரூபாய் 3,270 கட்டணம் செலுத்தி பயணம் செய்துள்ளனர். ஆண்டிபட்டியில் இருந்து தேனிக்கு 65 பயணிகள் ரூபாய் 1,950 கட்டணம் செலுத்தி பயணம் செய்துள்ளனர்.
மொத்தமாக 574 பயணிகள் பயணம் செய்ததில் ரூபாய் 21 ஆயிரத்து 750 வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கிய ரயில் சேவை...பயணிகள் மகிழ்ச்சி!!