ETV Bharat / state

புத்துணர்வு முகாமுக்கு புறப்பட்ட கோயில் யானைகள்..!

author img

By

Published : Dec 14, 2019, 11:11 AM IST

மதுரை: யானைகள் புத்துணர்வு முகாமில் பங்கேற்க மதுரையில் உள்ள அனைத்து கோயில் யானைகளும் இன்று அதிகாலையில் முதல் புறப்படத் தொடங்கின.

Elepahant Resreshment camp
Elepahant Resreshment camp

தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் உள்ள கோயில் யானைகளுக்கு மேட்டுப்பாளையம் அடுத்த தெப்பக்காடு பகுதியில் 48 நாள்கள் புத்துணர்வு முகாம் நடத்திவருகிறது. இந்த ஆண்டிற்கான முகாம் நாளை தொடங்கி 48 நாள்கள் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க மதுரையில் உள்ள அனைத்து கோயில் யானைகளும் இன்று அதிகாலை புறப்பட்டுச் சென்றன.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதி (25), திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானை(12), அழகர்கோவில் கோயில் யானை சுந்தரவள்ளி தாயார் (12) ஆகிய மூன்று யானைகளும் இன்று காலை பூஜை செய்யப்பட்டு லாரிகளில் ஏற்றப்பட்டு தெப்பக்காடு அனுப்பி வைக்கப்பட்டது.

வழியில் யானைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் கவனிப்பதற்காக மருத்துவர் முத்துராமலிங்கம், மருத்துவர் கங்காசுதன் உள்ளிட்ட கால்நடை உதவி மருத்துவர்கள் உடன் செல்கின்றனர். முன்னதாக, இம்முகாமில் யானைகள் எடை, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை செய்யப்பட்டு முகாமில் சேர்க்கப்படுகின்றன.

லாரியில் ஏற்றப்படும் கோயில் யானை

தொடர்ந்து, யானைகளுக்கு பல்வேறு வகையில் புத்துணர்வு பயிற்சிகள், சத்தான உணவுகள், மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு 48 நாட்கள் கழித்து மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்படும். மேலும் இம் முகாமில் கால்நடை மருத்துவர்கள் கொண்ட குழுவினர் அங்கேயே முகாம் அமைத்து சிகிச்சை மேற்கொள்கின்றனர். யானை பாகன்களுக்கும் பயிற்சி, உணவு தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம் இயற்கை சூழலில் அமைந்துள்ளதால் யானைகளுக்கு புத்துணர்வு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க:

தேனி அருகே தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் யானைகள் - விவசாயிகள் அச்சம்!

Intro:புத்துணர்வு முகாமுக்கு புறப்பட்ட மதுரை கோவில் யானைகள்

தமிழக அரசின் சார்பாக மேட்டுப்பாளையத்தில் நடைபெறவுள்ள யானைகள் புத்துணர்வு முகாமில் பங்கேற்க மதுரையில் உள்ள அனைத்து கோவில் யானைகளும் இன்று அதிகாலையில் இருந்து புறப்படத் தொடங்கின.Body:புத்துணர்வு முகாமுக்கு புறப்பட்ட மதுரை கோவில் யானைகள்

தமிழக அரசின் சார்பாக மேட்டுப்பாளையத்தில் நடைபெறவுள்ள யானைகள் புத்துணர்வு முகாமில் பங்கேற்க மதுரையில் உள்ள அனைத்து கோவில் யானைகளும் இன்று அதிகாலையில் இருந்து புறப்படத் தொடங்கின.

ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள கோவில் யானைகளுக்கு தமிழக அரசு மேட்டுப்பாளையம் தெப்பக்காடு எனுமிடத்தில் 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடத்திவருகிறது.

இந்த ஆண்டிற்கான முகாம் நாளை தொடங்கி 48 நாட்கள் மேட்டுப்பாளையத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதலில் உள்ள கோவில்கள் அனைத்தும் இன்று அதிகாலை புறப்படும் தொடங்கின.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதி, (வயது 25) திருப்பரங்குன்றம் யானை தெய்வானை, (வயது 12) அழகர்கோவில் யானை சுந்தரவள்ளி தாயார் (வயது 12) ஆகிய மூன்று யானைகளும் இன்று காலை பூஜை செய்யப்பட்டு லாரிகளில் ஏற்றப்பட்டு தெப்பக்காடு அனுப்பி வைக்கப்பட்டது.

வழியில் யானைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் கவனிப்பதற்காக Dr முத்துராமலிங்கம், Dr கங்கா சுதன் ஆகிய 2 கால்நடை உதவி மருத்துவர்கள் உடன் செல்கின்றனர். 48 நாட்கள் நடைபெறும் இம்முகாமில் யானைகள் முன்னதாக எடை பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு முகாமில் சேர்க்கப்படுகின்றன.

தொடர்ந்து யானைகளுக்கு பல்வேறு வகையில் புத்துணர்வு பயிற்சிகள், சத்தான உணவுகள், மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு 48 நாட்கள் கழித்து மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன.

மேலும் இம் முகாமில் கால்நடை மருத்துவர்கள் கொண்ட குழுவினர் அங்கேயே முகாம் அமைத்து சிகிச்சை மேற்கொள்கின்றனர். யானை பாகன்களுக்கும் பயிற்சி மற்றும் உணவு தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாம் யானைகளுக்கு இயற்கை சூழலில் இருக்கும் நிலையால் புத்துணர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. வழியில் யானைகளை கவனித்துக் கொள்வதற்காக கால்நடை மருத்துவர்கள் உடன் செல்கின்றனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.