சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவுக்கு உட்பட்ட கொந்தகையில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணிகளில் ஏற்கனவே இரண்டு குழந்தைகளின் எலும்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது அதேக் குழியில் மேலும் கூடுதலாக மூன்று எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பாக கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இம்முறை கூடுதலாக கொந்தகை அகரம் மணலூர் ஆகிய பகுதிகளில் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈமக்காடு உள்ள சொந்தகையில், பல்வேறு அளவுகளில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.
இதற்கிடையே இரண்டு முழுவடிவமுள்ள எலும்புக்கூடுகள் முறையே 75 செ.மீ, 90 செ.மீ என்ற அளவில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று (ஜூலை17) அதே குழியில் சற்றேறக்குறைய மேற்கண்ட அளவிலேயே மூன்று எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது கண்டறியப்பட்டுள்ள அனைத்து எலும்புக்கூடுகளும் முழுமையான மூலக்கூறு ஆய்வுகளுக்குப் பிறகு அதன் காலமும் ஆணா, பெண்ணா என்பது குறித்து முழுமையான விவரங்களும் தெரியவரும் என தொல்லியல் துறையின் இணை இயக்குனர் சிவானந்தம் கூறினார்.
இதையும் படிங்க: கீழடி ஆய்வு: கொந்தகையில் மீண்டும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு..!