மதுரையில் கடந்த மார்ச் இரண்டாவது வாரத்தில் தொடங்கிய கரோனா தொற்று மே, ஜூன் மாதங்களில் கடுமையாக அதிகரித்தது.
ஜூன் இறுதி வாரத்தில் இருந்து குறைய தொடங்கி தற்போது வரை அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை காட்டிலும் குணமடைந்து வீட்டிற்கு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
மதுரையில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காரணமாக இன்று புதிதாக 109 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 89 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சைப் பலனின்றி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.மதுரையில் மட்டும் இதுவரை 13 ஆயிரத்து 67 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், 11 ஆயிரத்து 660 பேர் முழுவதுமாக குணமடைந்துள்ளனர், தற்போது ஆயிரத்து 78 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர், இதுவரை 329 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். பிளாஸ்மா தானம் மூலமாக ஏழு பேர் இதுவரை குணமாகி உள்ளனர்.நாளொன்றுக்கு சராசரியாக மூன்று ஆயிரத்தில் இருந்து நான்கு ஆயிரம் பேர் வரை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இதன் காரணமாக தற்போது தொற்று பரவும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை நகர் அதன் மாவட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் மிகத் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.