மதுரை ரயில் நிலையத்தில் நவீன ஓய்வு அறைகள், சைவ-அசைவ உணவு விடுதி திறப்புவிழா இன்று நடைபெற்றது. மூன்று நட்சத்திர வசதிகளுடன் கூடிய எட்டு ஓய்வு அறைகள், 40 பேர் அமர்ந்து உணவருந்தக்கூடிய வகையில் அமைந்த உணவு விடுதியை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர். லெனின் திறந்துவைத்தார்.
இந்த புதிய நவீன ஓய்வு அறைகளில் தொலைக்காட்சி ஒளிபரப்பு வசதி, தொலைபேசி வசதி, நவீன குளியலறை, கழிவறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தேநீர் இயந்திரம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், 24 மணி நேரமும் இயங்கும் புதிய உணவு விடுதியில் நவீன காய்கறி நறுக்கும் இயந்திரம், பெரிய அளவிலான உணவு தயாரிக்கும் இயந்திரம், காய்கறிகள் மற்றும் உணவுப் பொருள்களை பாதுகாக்க குளிர்பதன அறை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.