ETV Bharat / state

மதுரையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டி கொலை! - madurai disrtict news

மதுரை : மேலூரில் அருகே பட்டப்பகலில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

madurai-murder-issue
madurai-murder-issue
author img

By

Published : Feb 10, 2021, 6:24 PM IST

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பூதமங்கலம் சாலையில், பேப்பனையன்பட்டியை சேர்ந்த விவசாயி வெள்ளைச்சாமி (30) இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை சரமாரியாக வெட்டினர். எதிர்பாராத இந்தத் தாக்குதலில் நிலைகுலைந்த வெள்ளைச்சாமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதையடுத்து, மேலூர் டி.எஸ்.பி ரகுபதிராஜா தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் உறவினர்களுக்குள் பிரச்னை காரணமாக கொலை அரங்கேறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் மேலூர் அருகே கொட்டகுடியில் இதேபோல பட்டப்பகலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்றும் ஒரு கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. அடுத்தடுத்து நிகழும் கொலைகளால் மேலூர் பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு தயாராக இல்லை- கே.எஸ்.அழகிரி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.