ETV Bharat / state

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்க வேண்டும்; சு. வெங்கடேசன் கோரிக்கை

மதுரை: நான்கு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விநியோகம் செய்து வரும் நிலையில், அதனை இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாக மாற்ற வலியுறுத்தி மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

Madurai MP
author img

By

Published : Aug 15, 2019, 3:46 AM IST

மதுரை மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி. மூர்த்தி ஆகியோர் மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்.பி வெங்கடேசன், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தற்போது நீர் இருப்பு 136 அடியாக உள்ள போது, வைகை அணையில் 30 அடிதான் நீர் உள்ளது என்றார். தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் தண்ணீர் திறந்து விட்டால் மதுரை மாவட்டத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் பற்றாக்குறையை போக்க முடியும் என்றும், இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் கூறினார்.

மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிவடையும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது என்றார்.

மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் மாவட்ட ஆட்சியரிடம் மனு

பாதாள சாக்கடை பணிகளுக்கான திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பான திட்ட அறிக்கையை கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்தி, திட்டக் குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் வெங்கடேசன் கூறினார்.

இதற்காக ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அந்தத் திட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், மாநகராட்சி நிர்வாகம் விரிவாக்க பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கும், பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் கூறினார். மேலும் நான்கு நாட்களுக்கு ஒருமுறை மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது போதிய அளவு தண்ணீர் உள்ளதால் மாநகராட்சி நிர்வாகம் இதில் மாற்றம் கொண்டு வந்து பொதுமக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.

Intro:இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்க கோரி மாநகராட்சி ஆணையரிடம் சு வெங்கடேசன் மனு

மதுரையில் தற்போது நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்து வருகின்ற நிலையில் அதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை யாக குறைக்க வலியுறுத்தி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மதுரை மாநகராட்சி ஆணையர் இடமும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தார்Body:இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்க கோரி மாநகராட்சி ஆணையரிடம் சு வெங்கடேசன் மனு

மதுரையில் தற்போது நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்து வருகின்ற நிலையில் அதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை யாக குறைக்க வலியுறுத்தி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மதுரை மாநகராட்சி ஆணையர் இடமும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தார்

மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.மூர்த்தி ஆகியோர் இன்று மதுரை மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகளை உடனடியாக துவக்க இடவேண்டும் மேலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்த வேண்டும் என்று மதுரை மாநகராட்சி ஆணையாளர் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்கள்

மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பேசிவிட்டு செய்தியாளர்களை சந்தித்த சு.வெங்கடேசன், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தற்போது நிதி இருப்பு 136 அடியாக உள்ளது ஆனால் வைகை அணையில் 30 அடி தான் உள்ளது தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நேரத்தில் தண்ணீர் திறந்து விட்டால் மதுரை மாவட்டத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் பற்றாக்குறை நீங்கி விடும் எனவே அது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளோம் என்று கூறினார்.

மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளுக்காக இட ஆர்ஜிதம் செய்து மாவட்ட நிர்வாகம் தற்போது மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது இன்னும் கூடிய விரைவில் அதற்கான பணிகளை வந்து துவங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மூன்றாண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிவடையும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது அதைச் சார்ந்த அமைச்சர்களும் தெரிவித்துள்ளார்கள் என்று கூறினார்.

மதுரை மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு பாதாள சாக்கடை பணிகளை துவக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் மதுரை மாநகராட்சி ஆணையாளரிடம் வைக்கப்பட்டுள்ளது மேலும் பாதாள சாக்கடை பணிகளுக்கான திட்டங்களை நிறைவேற்ற விரிவாக்கப் பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் குறித்த திட்டங்களை தற்போது கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி அவர்கள் திட்டக் குழுவுக்கு அனுப்பி உள்ளார்

மேலும் இதற்காக 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அந்த திட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே மாநகராட்சி நிர்வாகம் விரிவாக்க பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிப்பதற்கான பணிகளை துவங்க வேண்டும் மேலும் நான்கு நாட்களுக்கு ஒருமுறை மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் என்பது வினியோகம் செய்யப்படுகிறது தற்போது போதிய அளவு தண்ணீர் உள்ள நிலையில் அவை இரண்டு தினங்களுக்கு ஒருமுறை என்று மாநகராட்சி நிர்வாகம் மாற்றம் செய்ய வேண்டும் பொதுமக்களும் குடிநீர் பற்றாக்குறை இருந்து விடுபடுவார்கள் என்று கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.