மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியைச் சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க பெண்மணிக்கு ஏற்கனவே ஏழு, ஒன்பது வயதுகளில் இரு பெண் பிள்ளைகள் உள்ளன.
இந்நிலையில் மூன்றாவதாக கருத்தரித்த இந்தப் பெண்மணியின் கணவர் நான்கு மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இச்சூழலிலில் குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொண்டு கூலி வேலை செய்துவந்த இந்தப் பெண்மணிக்கு, கடந்த ஜூன் 15ஆம் தேதி செக்காணூரணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஏற்கனவே இரு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் கணவரும் இல்லாததால் வறுமையில் வாடிவந்த இந்தப் பெண்மணி, தற்போது மூன்றாவதாகப் பிறந்த பெண் குழந்தையை தன்னால் வளர்க்க முடியாது எனக் கண்ணீர்விட்டு அழுதுகொண்டே ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்தத் தகவலின்பேரில் ஆரம்ப சுகாதார நிலையம் வந்த மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களிடம் பெண் குழந்தையை அந்தத் தாய் ஒப்படைத்தார்.
இதையும் படிங்க...அறிவிப்பின்றி தொழிற்சாலை மூடல்: தொழிலாளர்கள் போராட்டம்!