மதுரை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் பொன்னூசல் ஆடி அருளும் ஆனி ஊஞ்சல் உற்சவம் இன்று (ஜூன்.15) மாலை தொடங்கியது. கரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் காரணமாக தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களின் வருகை தடைசெய்யப்பட்டுள்ளது.
ஆனால் சம்பிரதாய அடிப்படையில் அந்தந்த மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள், கோயில் வளாகத்திற்குள் பக்தர்களின்றி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொன்னூசல் ஆடி ஆருளும் ஆனி ஊஞ்சல் உற்சவம் இன்று (ஜூன்.15) மாலை தொடங்கியது.
அப்போது, ”சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாராயணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு
ஊராகத் தந்தருளும் உத்தரகோச மங்கை
ஆரா அமுதின் அருள் தாளிணைப் பாடிப்
போரார் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ"
என்ற மணிவாசகப் பெருமான் பாடலைப் பாடி இன்றைய உற்சவம் நிறைவடைந்தது.
இதையும் படிங்க: 'பராசக்தி ஹீரோடா'...சமூகவலைதளத்தில் ட்ரெண்டாகும்'சிவாஜி தி பாஸ்'