ETV Bharat / state

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த மீனாட்சி திருக்கல்யாணம் - பக்தர்கள் மகிழ்ச்சி! - மீனாட்ச்சியம்மன் கோயில் மதுரை

இரண்டு ஆண்டுகள் கழித்து இன்று நடைபெற்ற மதுரை மீனாட்சி திருக்கல்யாண வைபோகத்தில் கலந்து கொண்டது பெரு மகிழ்ச்சியாக இருப்பதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

மீனாட்சி திருக்கல்யாணம்
மீனாட்சி திருக்கல்யாணம்
author img

By

Published : Apr 14, 2022, 4:03 PM IST

மதுரை: சித்திரைத் திருவிழா மதுரையில் வெகு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், இன்று (ஏப்.14) மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டம் மட்டுமன்றி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர். காலை 10.30 மணியிலிருந்து 10.59 மணிக்குள் திருமாங்கல்ய நிகழ்வு நடைபெற்றது.

திருக்கல்யாணத்தில் கலந்துகொண்ட பக்தர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இத்திருமண நிகழ்வில் கலந்துகொண்ட மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நிவேதிதா கூறுகையில், 'கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த திருக்கல்யாண நிகழ்வு, கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் முன்னிலையில் நடைபெறாதது மிகுந்த வருத்தமாக இருந்தது. இந்நிலையில், அனைவரது வருத்தத்தையும் போக்குகின்ற வகையில் இன்று விழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. மீனாட்சி அம்மனைத் தரிசித்தது மனதுக்கு நிறைவாக உள்ளது' என்றார்.

மீனாட்சி திருக்கல்யாணம்

நாகப்பட்டினத்தில் இருந்து மீனாட்சி திருக்கல்யாணத்தைக் காண வந்திருந்த ஈஸ்வரி கூறுகையில், 'இந்த நிகழ்ச்சிக்காகவே நாங்கள் நாகையிலிருந்து வந்துள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக காத்திருந்து இன்று தரிசனம் செய்கிறோம். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.

தொடர்ந்து மதுரை விளாங்குடியைச் சேர்ந்த காளீஸ்வரி ராஜேஷ் கூறுகையில், 'மீனாட்சி திருக்கல்யாணத்தை நேரடியாகப் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி. பொதுமக்கள், பக்தர்களின் ஒத்துழைப்போடு திருக்கல்யாண நிகழ்வு நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது' என்றார்.

சாவித்திரி மற்றும் சந்திரா ஆகியோர் கூறுகையில், 'இது எங்கள் வீட்டுக் கல்யாணம் மாதிரி நடைபெற்றது. அன்னை மீனாட்சி திருமணமானது எங்களுக்கு பெருமகிழ்ச்சியாக உள்ளது. மக்கள் அனைவரும் சீரும் சிறப்புமாக நோய் நொடியின்றி நல்லபடியாக வாழ வேண்டும். கல்வி, செல்வம், உடல்நலன் ஆகியவை பரிபூரணமான அனைவருக்கும் கிடைக்க வேண்டும்' என்றனர்.

மீனாட்சி திருக்கல்யாணத்தைக் கண்ட பக்தர்கள்

திருக்கல்யாணத்தைக் காணுவதற்கான டிக்கெட், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்த டிக்கெட்டை நேரடியாகப் பெறுவதில் கடும் சிக்கல் இருந்ததாகவும், இதனை இந்து சமய அறநிலையத்துறை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் எனவும் இல்லையென்றால் வெளிமாவட்டங்களிலிருந்து வருகின்ற பக்தர்கள் தன்னைப் போலவே பெரும் இன்னலுக்கு ஆளாக நேரிடும் என்றும் சென்னையிலிருந்து வந்திருந்த அரசுப் பணியில் உள்ள பெண் ஒருவர் வேதனை தெரிவித்தார்.

இதையும் படிங்க: மீனாட்சி திருமணத்தில் மொய் வைத்த பக்தர்கள்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.