ETV Bharat / state

சந்திர கிரகணம்; அக்.28இல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைப்பு! - Chandra Grahanam 2023

Chandra Grahan 2023: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு அக்டோபர் 28ஆம் தேதி நடை சாத்தப்படுகிறது.

சந்திர கிரகணம்..மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைப்பு!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 10:34 AM IST

மதுரை: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. உலகப் புகழ் வாய்ந்த மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமன்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொள்கின்றனர்.

ஆண்டுதோறும் சராசரியாக 4 முறை கிரகணங்கள் நிகழும். அதன்படி, சந்திர கிரகணம் அக்டோபர் 28ஆம் தேதி நடக்க உள்ளது. சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழும். அப்போது நிலவின் நிழலை சூரியன் மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழலை சந்திரன் மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.

இதையும் படிங்க: 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி... சென்னை விமான நிலையத்தில் சிக்கியது எப்படி?

அதன்படி, சந்திர கிரகணம் அக்டோபர் 28ஆம் தேதி நள்ளிரவு 1.05 மணி முதல் நள்ளிரவு 2.23 மணி வரை நிகழ உள்ளது. சந்திர கிரகணம் நேரத்தில் கோயில்களில் நடை சாத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் நடை அன்று மாலை 6 மணிக்கு அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், 6 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்யவோ, அர்ச்சனை செய்யவோ அனுமதி இல்லை எனவும், வழக்கம்போல் 29ஆம் தேதி காலை 5 மணிக்கு மேல் தரிசனம் நடைபெறும் எனவும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: சாட்சிகளின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நீதிமன்ற நீதிபதி ஆராய தேவையில்லை - உயர் நீதிமன்றக்கிளை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.