மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றுவருவதை ஒட்டி நேற்று அதன் நான்காம் நாள் கோயில் வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
கரோனா பெருந்தொற்று காலம் என்பதால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கோயில் நடை சாத்தப்பட்டு, வழக்கம்போல் நடைபெறுகின்ற கோயில் திருவிழாக்கள் அதன் வளாகத்தில் பக்தர்களின்றி நடைபெற்றுவருகிறது.
தற்போது ஆனி ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றுவருவதை ஒட்டி மீனாட்சி, சுந்தரேஸ்வரர் எழுந்தருளி அருள்பாலித்துவருகின்றனர். இன்றைய நான்காம் நாள் நிகழ்ச்சியிலும் அம்மனும், சுவாமியும் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
நான்காம் நாள் ஆனி உற்சவ விழாவை முன்னிட்டு, கீழ்க்கண்ட மாணிக்கவாசகப் பெருமானின் பாடல், சுவாமி முன் பாடி அருளப்பட்டது.
“நஞ்சமர் கண்டத்தன் அண்டத்தவர் நாதன்
மஞ்சுதோய் மாடமணி உத்தரகோச மங்கை
அஞ்சொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்றமுதம் ஊறிக் கருணை செய்து
துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ் பாடிப்
புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ” என்ற மணிவாசகப் பெருமான் பாடல் பாடப்பட்டு நேற்றைய நாள் விழா நிறைவடைந்தது.
இதையும் படிங்க: WTC FINAL: மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து... நாளை நமதே?