மதுரை பழ கமிஷன் வணிகர்கள் சங்கச் செயலர் ஜி.கந்தையா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "மதுரையில் யானைக்கல், சிம்மக்கல் பகுதிகளில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த பழக்கடைகள் போக்குவரத்து நெரிசல் காரணமாக மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் அருகே 16 கோடி ரூபாயில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட பழ மார்க்கெட்டிற்கு மாற்றப்பட்டது. இங்கு 240 கடைகள் உள்ளது.இந்த பழ மார்க்கெட்டிற்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பழங்களை இறக்கவும், வேறு இடங்களுக்கு ஏற்றிச் செல்லவும் வந்து செல்கின்றது.
பழ மார்க்கெட்டில் தற்போதுள்ள வாகனங்கள் நிறுத்தும் இடம் குறுகலாக உள்ளது.இந்நிலையில் வாகனம் நிறுத்தும் இடத்தில் 10 கடைகள் கட்ட மாநகராட்சி கடந்த 10 ஆம் தேதி டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே வாகன நிறுத்தும் இடம் போதுமானதாக இல்லாத நிலையில், அந்த இடத்தில் கடைகள் கட்டினால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வியாபாரிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுவர்.எனவே ஸ்மார்ட் சிட்டி பழ மார்க்கெட்டில் வாகன நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பத்து கடைகள் கட்டுவது தொடர்பான டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். அதற்கு தடை விதிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பழ மார்க்கெட்டில் புதிதாக 10 கடைகள் கட்டுவது தொடர்பாக டெண்டர் விடலாம். ஆனால் அந்த டெண்டரை இறுதி செய்யக்கூடாது. மனு தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:
'பஸ்ஸ நிறுத்துறியா! மல்லாக்க படுக்கவா!' - 'ஏய்' வடிவேலுவை மிஞ்சிய போதை ஆசாமி!