ETV Bharat / state

மதுரை பல்கலை.,யில் கரோனா சிகிச்சை எனப் பரப்பியவர் கைது!

author img

By

Published : May 10, 2020, 8:50 PM IST

மதுரை: கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சிகிச்சை அளிக்க உள்ளதாக தவறான தகவல்களை வாட்ஸ்-அப் குரூப்பில் பரப்பி போராட்டத்திற்கு அழைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை பல்கலை.யில் கரோனா சிகிச்சை எனப் பரப்பியவர் கைது!

கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, வெளிநாடு, வெளிமாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து மதுரைக்கு வருபவர்களை தனிமைப்படுத்துவதற்காக, மதுரை மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 400 படுக்கை வசதிகள் கொண்ட தனிமைப்படுத்துவதற்கான அறைகள் தயார் செய்யப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், வாட்ஸ்-அப் என்ற செயலியில் உள்ள கரடிப்பட்டி மற்றும் வடபழஞ்சி குரூப் என்ற பக்கத்தில், வடபழஞ்சிச் சேர்ந்த திருப்பரங்குன்றம் ஒன்றிய துணைச் சேர்மன் இந்திராயின் கணவர் ஜெயக்குமார் என்பவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் பணி நடந்து வருவதாகவும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்தால் நமது பகுதியிலும் நோய் பரவ வாய்ப்புள்ளதாகவும் எனத் தவறான செய்தியைப் பரப்பியுள்ளார்.

அதுமட்டுமின்றி, வாட்ஸ்-அப் குரூப்பில் உள்ள வடபழஞ்சி, கரடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்களை மதுரை காமராஜர் பல்கலைக்கழக நுழைவாயிலுக்குப் போராட்டத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் முனியாண்டி கொடுத்த புகாரின் பெயரில் மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் துறையினர் ஜெயக்குமாரை கைது செய்தனர். மேலும் ஜெயக்குமார் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க...ஆதரவற்ற குழந்தைகளின் தாய் திருநங்கை நூரி சலீம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.