ETV Bharat / state

பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு: அறிக்கை தாக்கல்  செய்ய உத்தரவு - madurai court news

மதுரை, காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக பல்கலைக்கழக சிண்டிகேட் குழு, பேராசிரியர் தேர்வுக் குழு கூடி எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai-kamarajar-university-professor-appointment-issue

author img

By

Published : Aug 13, 2021, 2:06 PM IST

மதுரை: லயோனல் அந்தோணி ராஜ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை இருந்த காலக்கட்டத்தில் இணைப் பேராசிரியர், உதவி பேராசிரியர்கள் பலருக்கு பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதில் தகுதியற்ற பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில் உயர் மட்டக் குழு விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையிலான உயர்மட்டக் குழு விசாரணை செய்து முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்து அறிக்கையளித்தது. முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க சிண்டிகேட் துணைவேந்தருக்கு அதிகாரம் கொடுத்தது.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், முறைகேடாக வழங்கப்பட்ட பதவி உயர்விற்கு தடை விதித்தும், உயர்மட்டக் குழுவின் இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை உடனடியாக நிறைவேற்றவும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஏற்கனவே இந்த மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், உயர்மட்டக் குழு அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு சிண்டிகேட் உறுப்பினர்களாக உள்ள மூன்று பேராசிரியர்கள் செயல்படத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று (ஆக.12) நீதிபதி துரைசாமி, முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. பேராசிரியர்கள் நியமனம் குறித்து பேராசிரியர் தேர்வுக் குழு சிண்டிகேட் குழுவிடம் அறிக்கை கொடுத்துள்ளது என காமராசர் பல்கலைக் கழகம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், பேராசிரியர் தேர்வுக் குழு கொடுத்த அறிக்கையையும் அதன் மீது சிண்டிகேட் குழு எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க : அபராதமின்றி தொழில் வரி செலுத்தும் வகையில் கால அவகாசம் நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.