ETV Bharat / state

காமராஜர் பல்கலைகழக மதிப்பெண் முறைகேடு: ஹரிபரந்தாமன் தலைமையில் விசாரணைக் குழு! - விசாரணைக் குழு

மதுரை: காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித்துறையில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தான் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

madurai kamarajar university
author img

By

Published : Jul 2, 2019, 12:47 PM IST

கடந்த 2014, 2015ஆம் ஆண்டிலிருந்து தொலைநிலைக் கல்வித்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற மையங்களில் தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்குவதற்காக முறைக்கேடாக பணம் வசூலித்தல், தேர்வே எழுதாத மாணவ, மாணவியருக்கும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கி பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றதாக, பட்டச் சான்றிதழ் வழங்கியதும் இதற்காக கோடிக்கணக்கில் பணம் வசூலித்தாகவும் புகார் எழுந்தது.

இவை அனைத்தும் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக மு.கிருஷ்ணன் பதவி ஏற்றதும் இதுதொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதையடுத்து தொலைநிலைக் கல்வித்துறையில் நடைபெற்ற முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டன. இதற்கான ஆவணங்களும் சிக்கின. இப்புகாரில் தொலைநிலைக் கல்வித்துறை கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன், கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் கார்த்திகைச்செல்வன் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் தொலைநிலைக் கல்வித்துறையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் இதில் தொடர்புடைய தொலைநிலைக் கல்வித்துறை கூடுதல் தேர்வாணையர் மீது நடவடிக்கை எடுப்பது என்றும் சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஹரிபரந்தாமன் தலைமையில் விசாரணைக் குழு

இதுதொடர்பாக பல்கலைக்கழக வட்டாரங்கள் கூறும்போது, தொலைநிலைக்கல்வி கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன் மற்றும் மேலும் சிலர் மீது உள்ள முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் அவர் மீது நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், பல்கலைக்கழகம் தன்னிச்சையாக எடுக்காமல் விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது என்று சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வித்துறையில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தலைமையில், முன்னாள் துணைவேந்தர் ஒருவர், தணிக்கையாளர் ஒருவர் உட்பட மூவர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழுவினர் தொலைநிலைக் கல்வித்துறை முறைக்கேடுகள் தொடர்பாக விரைவில் விசாரணை நடத்த உள்ளனர். குழுவினர் விசாரணை நடத்தி அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் முறைக்கேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர்.

Intro:காமராஜர் பல்கலைக் கழக மதிப்பெண் பட்டியல் முறைகேடு தொடர்பாக நீதிபதி ஹரிபரந்தாமன் தலைமையில் விசாரணைக்குழு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித்துறையில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தான் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலை கல்வித்துறையின் சார்பில் பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. தனியார் மையங்கள் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றன. இதன்படி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியரும் பயின்று வருகின்றனர்.
Body:காமராஜர் பல்கலைக் கழக மதிப்பெண் பட்டியல் முறைகேடு தொடர்பாக நீதிபதி ஹரிபரந்தாமன் தலைமையில் விசாரணைக்குழு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித்துறையில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தான் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலை கல்வித்துறையின் சார்பில் பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. தனியார் மையங்கள் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றன. இதன்படி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியரும் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2014 - 2015-ஆம் ஆண்டிலிருந்து தொலைநிலை கல்வித்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற மையங்களில் தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்குவதற்காக முறைகேடாக பணம் வசூலித்தல் மற்றும் தேர்வே எழுதாத மாணவ, மாணவியருக்கும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கி பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றதாக பட்டச் சான்றிதழ் வழங்கியதும் இதற்காக கோடிக்கணக்கில் பணம் வசூலித்தாகவும் புகார் எழுந்தது.

இப்புகார்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக மு.கிருஷ்ணன் பதவி ஏற்றதும் இதுதொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதையடுத்து தொலைநிலைக்கல்வித்துறையில் நடைபெற்ற முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டன. இதற்கான ஆவணங்களும் சிக்கின.

இப்புகாரில் தொலைநிலைக்கல்வித்துறை கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன், கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் கார்த்திகைச்செல்வன் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் தொலைநிலைக்கல்வித்துறையில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் விவாதிக்கப்பட்டன. மேலும் இதில் தொடர்புடைய தொலைநிலைக்கல்வித்துறை கூடுதல் தேர்வாணையர் மீது நடவடிக்கை எடுப்பது என்றும் சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக வட்டாரங்கள் கூறும்போது, தொலைநிலைக்கல்வி கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன் மற்றும் சிலர் மீது உள்ள முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் அவர் மீது நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், பல்கலைக்கழகம் தன்னிச்சையாக எடுக்காமல் விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தி அதன்அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது என்று சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வித்துறையில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன் தலைமையில், முன்னாள் துணை வேந்தர் ஒருவர் மற்றும் தணிக்கையாளர் ஒருவர் உட்பட மூவர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழுவினர் தொலைநிலைக்கல்வித்துறை முறைகேடுகள் தொடர்பாக விரைவில் விசாரணை நடத்த உள்ளனர். குழுவினர் விசாரணை நடத்தி அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர்.

இது குறித்து உயர்கல்வி பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் சீனிவாசன் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு தொலைபேசி வழியே அளித்த நேர்காணலில், 'மதிப்பெண் பட்டியல் முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது பல்கலைக் கழக நிர்வாகம் உடனடியாக பணியிடை நீக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி, பி.பி.செல்லத்துரை துணைவேந்தராகப் பணியாற்றிய காலத்தில் நிகழ்ந்த முறைகேடுகள் அனைத்தையும் தற்போதைய துணைவேந்தர் கிருஷ்ணன் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துணைவேந்தர் கிருஷ்ணன் இதுபோன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த நினைத்தாலும்கூட, அரசியல் அழுத்தம் காரணமாக அவரால் மேற்கொண்டு செயல்பட இயலாத சூழல் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். தமிழக உயர்கல்வி குறித்து நாங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு, இந்த நடவடிக்கைகள் வெற்றிதான் என்றாலும் கடக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது. பாரம்பரியமான பல்கலைக் கழகத்தின் பெயர் எந்தவிதத்திலும் கெட்டுவிடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்' என்றார்.

(இதுகுறித்த விடியோவை மோஜோவில் TN_MDU_01a_02_MKU_DDE_SCAM_HARIPARANTHAMAN_VISUAL_9025391 என்ற பெயரில் இன்று காலை 11 மணியளவில் அனுப்பியுள்ளேன்)
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.