மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 54ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மு.வரதராசனார் அரங்கத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் நடைபெற்றது.
இதில் கௌரவ விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் முதன்மை விருந்தினராக இந்திய அறிவியல் கழக நிறுவன முன்னாள் இயக்குநர் பலராம் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கடந்த 2019-20 மற்றும் 2020-21 ஆகிய கல்வி ஆண்டுகளில் முனைவர் பட்டம் பெற்ற ஆயிரத்து 48 மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதனை தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பயின்ற சுமார் ஒரு லட்சத்து 33 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.
இதையும் படிங்க: வைரமுத்து பிறந்தநாள் விழா; "வைரமுத்து இலக்கியம் 50"