ETV Bharat / state

கனமழையால் மதுரை மல்லி விலை திடீர் சரிவு..வியாபாரிகள் வேதனை! - Madurai heavy rain

தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக மதுரை மல்லிகையின் விலை சரிந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளானர்.

கனமழையால் மதுரை மல்லி விலை திடீர் சரிவு
கனமழையால் மதுரை மல்லி விலை திடீர் சரிவு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 11:17 AM IST

மதுரை: மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மதுரை மலர்ச் சந்தையில் மலர்கள் அனைத்தும் தேக்கமடைந்துள்ளதால், மல்லிகை விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது, மலர் வணிக வளாகம். இங்கு வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு, நெடுங்குளம், காரியாபட்டி, மேலூர், கொட்டாம்பட்டி, சத்திரப்பட்டி, ஊமச்சிகுளம், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் விளையும் பூக்கள், மதுரை மலர் வணிக வளாகத்திற்குக் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் மதுரை மாவட்டம் மட்டுமன்றி, அண்டை மாவட்டங்களான விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளிலிருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 டன்னுக்கும் மேலாக பூக்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

குறிப்பாக, மதுரையைச் சுற்றி பல்வேறு பகுதிகளில் விளையும் மல்லிகைக்கு தனிச்சிறப்பு உண்டு என்பதால், 2013ஆம் ஆண்டு மத்திய அரசு புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கியுள்ளது. இதன் காரணமாக வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் மட்டுமன்றி துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் மதுரை மல்லிகை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மதுரையிலிருந்து ஏற்றுமதி செய்ய வேண்டிய மலர்கள் அனைத்தும் மதுரை மலர் சந்தையில் தேக்கமடைந்துள்ளது. இதனால், சந்தையில் மல்லிகை உள்ளிட்ட பல்வேறு பூக்களின் விற்பனையில் பெரிதும் சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மதுரை மல்லிச் சந்தையில், இன்றைய விலை நிலவரப்படி, மல்லிகை கிலோ ரூ. ஆயிரத்து 500, பிச்சி ரூ.600, முல்லை ரூ.800, சம்பங்கி ரூ.120, பட்டன் ரோஸ் ரூ.180, பன்னீர் ரோஸ் ரூ.180, செண்டு மல்லி ரூ.100, செவ்வந்தி ரூ.120, அரளி ரூ.200, கனகாம்பரம் ரூ.600, மெட்ராஸ் மல்லி ரூ.500 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: தொடர் கனமழை எதிரொலி: கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.