ETV Bharat / state

என்.சி.சி பயிற்சி அளிப்பது தொடர்பான வழக்கு: பள்ளிக்கல்வித்துறை செயலர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை: அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் என்.சி.சி பயிற்சி அளிப்பது தொடர்பான வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை உயர்நீதிமன்றம்
author img

By

Published : Mar 28, 2019, 9:27 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடுவைச் சேர்ந்த ஹோமர்லால் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநலமனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் தற்போது இளைஞர்களால் நடைபெறும் விபத்துக்கள் மற்றும் குற்றசம்பவங்கள் பெருமளவு அதிகரித்து வருகின்றன. சாலையின் தரத்தை கருத்தில் கொள்ளாமல், போக்குவரத்து விதிமுறைகளை மீறி மாணவர்கள் இருசக்கர வாகனங்களை இயக்குவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதற்கு கல்வியை மனப்பாடம் செய்து பயில மட்டும் கட்டாயப்படுத்துவதும், மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்காததும்தான் காரணம்.

எனவே மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும், கல்வி தொடர்பான அழுத்தத்திலிருந்து விடுபடவும் இரண்டு வருட ராணுவ வகுப்பு அளித்திட வேண்டும். அதனால், குறைந்தபட்சம் ஆறாம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் என்.சி.சி பயிற்சியளிக்க வேண்டும். இதனால் மாணவர்களுக்கு கல்வியினால் ஏற்படும் மன அழுத்தம் நீங்கி கல்வி கற்கும் மனநிலை உருவாகும் வாய்ப்பு ஏற்படும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒழுக்கமும், கட்டுப்பாடுமின்றி அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ இயலாது. ஆகையால் மாணவர்களுக்கு, பெரியவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட நன்னெறிகளை கற்றுத்தருவது அவசியம் எனக் கூறியது. இந்த வழக்கில் சிபிஎஸ்இ மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையை தாமாக முன் வந்து எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் மனு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 11ஆம் தேதிக்கு நீதிமன்ற அமர்வு ஒத்திவைத்தது.

அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கும் 6 - ம் வகுப்பு முதல் NCC பயிற்சி மற்றும் நன்னெறி வகுப்புகளை தினம்தோறும் நடத்த கோரிய வழக்கில்  பள்ளி கல்வித்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடுவைச் சேர்ந்த ஹோமர் லால்  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். 
அதில்,"தமிழகத்தில் தற்போது இளைஞர்களால் நடைபெறும் விபத்துக்கள் மற்றும் குற்றசம்பவங்கள் பெருமளவு அதிகரித்து வருகின்றன. சாலையின் தரத்தை கருத்தில் கொள்ளாமல், போக்குவரத்து விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனங்களை இயக்குவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதற்கு  கல்வியை மனப்பாடம் செய்து பயில மட்டும் கட்டாயப்படுத்துவதும் . மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்காததும், மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் போதிக்காததுமே காரணம் ஆகும். மேலும் , மாணவர்களை கல்வி தொடர்பான மன அழுத்தத்திலிருந்து  விடுபட  போதிய நடவடிக்கை எடுக்காததால் மன அழுத்தத்தில் மாணவர்கள் தற்கொலை செய்வதும் , ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடற்ற வகையில் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வதாலும் வாகனங்களை இயக்குவதிலும் ,பிற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதும் தொடர்ந்து வருகிறது. இதனால், தமிழகத்தில் விபத்துக்களும் குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன .சில வெளிநாடுகளில் படித்து முடித்தவுடன் இரண்டு வருடம் இராணுவத்தில் கட்டாயம் பணிபுரிய வேண்டும் என்பது சட்டம். அதேபோல இரண்டு வரும் இராணுவத்தில் பணிபுரியும்போதே அவர்கள் கட்டுப்பாடுடன் வளரவும் , ஒழுக்கமுடன் வாழவும் கற்றுக்கொள்கிறார்கள் . ஆகையால் , பொறுப்புணர்வுடன் அவர்கள் , செயல்படுவதால் வானங்களை இயக்குவது உட்பட அனைத்து நடவடிக்கைகளிலும் கட்டுப்பாட்டோடு ஒழுக்கத்தோடு நடக்கின்றனர். தற்போது இராணுவத்தில் அனைத்து மாணவர்களையும்  பணியமர்த்துவது என்பது நம் நாட்டில் இயலாத காரியம் . அதனால் குறைந்த பட்சம் ஆறாம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் ( தனியார் பள்ளி மாணவர்கள் உட்பட ) NCC யில் சேர்ந்து பயிற்சி அளிப்பது மற்றும் நன்னெறி வகுப்புகளை கட்டாயமாக்கினால் மாணவர்கள் கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக்கொள்ள உதவும். மாணவர்களின் மன அமுத்தமும் குறையும் . மாணவர்களுக்கு கல்வியினால் ஏற்படும் மன அழுத்தம் நீங்கி கல்வி கற்கும் மன நிலை உருவாகும் வாய்ப்பு ஏற்படும்.
ஆகவே, தனியார் பள்ளி மாணவர்கள் உட்பட அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி  மாணவர்களுக்கும் 6 - ம் வகுப்பு முதல் NCC பயிற்சி பெறுவதை கட்டாயமாக்கிடவும் . நன்னெறி வகுப்பை தினம்தோறும் போதிக்கவும் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவந்து . தரமான தொழில் பயிற்சியுடன் கல்வியை வழங்கவும் தக்க நடவடிக்கை எடுக்க  உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த  நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர்  ஒழுக்கமும், கட்டுப்பாடுமின்றி அமைதியாக மகிழ்ச்சியாக வாழ இயலாது. ஆகையால் மாணவர்களுக்கு, பெரியவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட நன்னெறிகளை கற்றுத்தருவது அவசியம். தற்போதைய சுழலில் இது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்று. ஆகையால் இந்த வழக்கில்  CBSE  மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையை  நீதிமன்றம் தாமாக முன் வந்து எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிடுவதாக தெரிவித்தனர். தொடர்ந்து மனு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஏப்ரல் 11 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.