ETV Bharat / state

ஓய்வு வயதை அதிகரித்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு தள்ளிவைப்பு - madurai district news

மதுரை: அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை  உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

மதுரை உயர் நீதிமன்றம்
மதுரை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Mar 11, 2021, 1:02 PM IST

மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த கோபிநாத் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "தமிழ்நாடு முதன்மைச் செயலர் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி அரசாணை எண் 29ஐ பிறப்பித்தார். அதன்படி ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்த்தப்பட்டிருந்தது.

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்து அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் இந்த ஓய்வு பெறும் வயது உயர்வு என்பது பொருந்தும். இதன் காரணமாக வேலையில்லா திண்டாட்டம், வறுமை போன்றவற்றால் தமிழ்நாடு இளைஞர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர். இளைஞர்களின் அரசுப் பணி கனவு நிறைவேறாமல் போக வாய்ப்பு உண்டு. ஆகவே ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று (மார்ச்.11) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இளைஞர்கள் பலர் வேலை வாய்ப்பின்றி சிரமத்திற்கு ஆளாகி வரும் சூழலில் இதுபோல் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியது ஏற்கத்தக்கதல்ல" எனத் தெரிவித்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், எந்த சட்டபின்புலத்தின் அடிப்படையில் இந்த அரசாணையை எதிர்க்கலாம்? என்பது குறித்த தயார் செய்து வாதிட அறிவுறுத்தி, வழக்கை வரும் 18ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.