ETV Bharat / state

மணல் கடத்தல்: தூத்துக்குடி எஸ்பிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - Madurai High Court ordered to send a contempt notice to the Tuticorin SP regarding sand smuggling case

மணல் கடத்தல் வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்று கூறி தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

madurai
மணல் கடத்தல்
author img

By

Published : Sep 2, 2021, 2:45 PM IST

தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அந்த மனுவில், "மணல் கடத்தல் வழக்கில் சாயர்புரம் காவல் துறையினர் என்னை ஜூலை 22ஆம் தேதி கைதுசெய்தனர். இந்த வழக்கில் பிணை வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி. புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, "2019இல் மணல் கடத்தல் வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஜூலையில்தான் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதே மனுதாரர் பட்டா நிலத்திலிருந்து 1,500 யூனிட் மணல் கடத்திய புகாரை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வழக்கை காவல் கண்காணிப்பாளர் முறையாகக் கண்காணிக்கத் தவறிவிட்டார். எனவே, அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு, நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

மணல் கடத்தல் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த் துறையினர் உரிய அலுவலர்களின் கவனத்துக்குக் கொண்டுசெல்லவில்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிணை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பம்பர் டூ பம்பர் காப்பீடு வழக்கு ஒத்திவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.