ETV Bharat / state

"6 மாதத்துக்கு ஒருமுறை ட்ரோன் கொண்டு கல்குவாரிகளை அளவிட்டு தமிழக அரசு சான்று" - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை! - Court ordered DVAC enquiry

ADMK Ex Minister MR Vijaya Baskar father stone quarry case: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தந்தை நடத்திய கல்குவாரியில் சட்ட விரோதமாக கற்கள் எடுக்கப்பட்டதாக வட்டாட்சியர் அளித்த அறிக்கை அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் விசாரணை நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Madurai High Court Ordered dvac enquiry at ADMK Ex Minister Vijaya Basker father stone quarry case
அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தந்தையின் கல்குவாரி முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 10:26 PM IST

மதுரை: கரூரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தந்தை எம்.ராமசாமி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "கரூர் மாவட்டம் புகளூர் தாலுகா அத்திபாளையத்தில் 2011- 2021 வரை பத்தாண்டுகள் பட்டா நிலத்தில் கல் குவாரி நடத்த உரிமம் பெற்றிருந்தேன்.

குவாரி உரிமம் காலாவதியாக ஒரு மாதம் இருந்த நிலையில் நிலத்தைக் கண்ணப்பன் என்பவருக்கு விற்றேன். பின்னர் குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி மனு அளித்தேன். இந்நிலையில், நான் நடத்திய குவாரியில் சட்ட விரோதமாகக் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகக் கூறி எனக்கு ரூ.15.55 கோடி அபராதம் விதித்து கரூர் கோட்டாட்சியர் 12.7.2023ல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு பிறப்பிக்கும் முன்பு எனக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவில்லை. இதனால் அபராதம் விதித்து கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் தெரிவிக்கும் போது, ''மனுதாரர் முன்னாள் அமைச்சரின் தந்தை என்பதால் அரசியல் காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் குவாரி நிலத்தை விற்ற நிலையில், அதை வாங்கியவர் சட்டவிரோத குவாரி நடத்தி வந்தார். இது தொடர்பாக மனுதாரர் ஆட்சியரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது'' என்றார். தமிழ்நாடு அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் தெரிவிக்கும் போது, "மனுதாரர் நடத்திய குவாரியில் புகளூர் வட்டாட்சியர் ஆய்வு நடத்தி பெரியளவில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக அறிக்கை அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் : "இந்த வழக்கில் அபராத உத்தரவு பிறப்பிக்கும் முன்பு மனுதாரருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவில்லை. இது இயற்கை நீதிக்கு எதிரானது. இதனால் அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு குவாரி உரிமம் வழங்கப்பட்ட இடத்தில் மாவட்ட ஆட்சியர் நில அளவைத்துறை, கனிம வளத்துறை உதவியுடன் ட்ரோன் தொழில்நுட்ப உதவியுடன் சட்டவிரோதமாக எவ்வளவு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்பதை அளவீடு செய்ய வேண்டும்.

பின்னர் நடவடிக்கை தேவை என்றால், அதற்காக நேர்மையான கோட்டாட்சியர் ஒருவரை நியமிக்க வேண்டும். அவர் மனுதாரர், நிலத்தை வாங்கிய கண்ணப்பன் ஆகியோருக்கு நோட்டீஸ் அளித்து விசாரணை நடத்தி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மனுதாரர் குவாரி முறைகேடு தொடர்பாக புகளூர் வட்டாட்சியர் 24.12.2021ல் அளித்த அறிக்கை அடிப்படையில் மாவட்ட ஆட்சியர், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனுதாரருக்கு வாய்ப்பு வழங்காமல் அபராதம் விதித்து கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பிக்க என்ன காரணம் என்பதையும் மாவட்ட ஆட்சியரும், கோட்டாட்சியரும் விசாரிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளில் 6 மாதத்துக்கு ஒரு முறை ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அளவீடு செய்து உரிய அதிகாரிகள் சான்று வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

மேலும், உத்தரவுகள் பிறப்பிக்கும் போது இயற்கை நீதியின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது'' என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தலைமை ஆசிரியரின் பணி கல்வி கற்பிப்பதா? மடிக்கணினியைப் பாதுகாப்பதா? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.