மதுரை: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் இருவரும் 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் காவல் துறையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தனர்.
இது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கில், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜ், காவலர்கள் செல்லதுரை, வெயிலு முத்து, தாமஸ் பிரான்சிஸ், சமயதுரை உள்ளிட்ட ஒன்பது பேர் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் உள்ள சாத்தான்குளம் காவல் நிலைய காவலர் சாமதுரை, தனது மகள் பூப்புனித நீராட்டு விழாவில் பங்கேற்க. தனக்கு ஜுன் 5 ம் தேதி முதல் ஜூன் 7 ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனிடையே, இந்த மனு இன்று (ஜூன்.6) நீதிபதி முரளிசங்கர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி இன்று 1 மணி முதல் முதல் நாளை மாலை 4 மணி வரை இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 16 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற பெற்றோருக்கு மரண தண்டனை!