ETV Bharat / state

கூட்டுறவு சங்க தலைவர்கள் காசோலையில் கையொப்பமிட்டு அதிகாரத்தை நீக்கும் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை உத்தரவு'

author img

By

Published : Jul 1, 2022, 9:06 AM IST

கூட்டுறவு வேளாண்மை கடன் சங்க தலைவர்கள் கையொப்பமிட்டு வழங்கப்படும் காசோலைகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று கூட்டுறவு சங்க பதிவாளரின் சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai-high-court-granted-an-interim-stay-on-registrar-of-co-operative-societies-circular-disallowing-co-operative-society-leaders-to-sign-cheque கூட்டுறவு சங்க தலைவர்கள் காசோலையில் கையொப்பமிட்டு அதிகாரத்தை நீக்கும் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை உத்தரவு'

மதுரை: முதுகுளத்தூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை சங்கத்தின் தலைவர் சங்கரபாண்டியன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "நான் முதுகுளத்தூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை சங்கத்தின் தலைவராக உள்ளேன். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், அதன் உறுப்பினர்களுக்குக் கடன் வழங்குதல் மற்றும் இதர பணப்பரிமாற்றம் செய்வதற்கு காசோலை வழங்கப்பட்டது.

இந்த கூட்டுறவு சங்கங்களின் பணப் பரிவர்த்தனைக்கு சங்கங்களின் தலைவர் கசோலையில் கையெப்பம் இடும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. கடந்த 22.03.2022 அன்று, கூட்டுறவு பதிவாளர் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டார். பதிவாளரின் சுற்றறிக்கையின் படி சங்கங்களின் தலைவர் காசோலையில் கையொப்பமிடும் அதிகாரம் ரத்து செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர், மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை மேலாளர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், கூட்டுறவு கடன் சங்க தலைவர்கள் கையொப்பமிட்டு வழங்கப்பட்டுள்ள காசோலைகளைப் பணப்பரிவர்த்தனைக்கு ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று மற்றொரு சுற்றறிக்கை 06.04.2022 அன்று வழங்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

உள்நோக்கத்துடன் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. எனவே, கடந்த 22.03.2022 அன்று தொடக்க கூட்டுறவு கடன் சங்க தலைவர்கள் கையொப்பமிட்டு வழங்கப்பட்டுள்ள காசோலைகளைப் பணப்பரிவர்த்தனைக்கு ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்ற சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜீ.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று (ஜூன்.30) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், பதிவாளரின் சுற்றறிக்கை தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கச் சட்ட விதிகளுக்கு எதிரானது. கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்களின் காசோலையில் கையொப்பம் இடும் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மாநில பதிவாளர் சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கு குறித்து மாநில கூட்டுறவு பதிவாளர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: வணிக வங்கிகளோடு போட்டி போடும் அளவுக்கு வியாபாரத்தை பெருக்கவேண்டும் - கூட்டுறவு வங்கிகளுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.