ETV Bharat / state

சிறையில் "A" வகுப்பு வழங்க கோரிய மனு:யூடியூபர் மனிஷ் காஷ்யப் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை - madurai highcourt

மத்திய சிறையில் "A" வகுப்பு வழங்க கோரிய பிரபல பீகார் யூடியூபர் மனிஷ் காஷ்யப் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

மனிஷ் காஷ்யப் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை
சிறையில் "A" வகுப்பு வழங்க கோரி மனு
author img

By

Published : Jul 12, 2023, 2:21 PM IST

மதுரை: வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது போல் போலி வீடியோ வெளியிட்ட பீகாரை சேர்ந்த யூடியூபர் திரிபுராரி குமார் திவாரி (எ) மனிஷ் காஷ்யப் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் மனிஷ் காஷ்யப்க்கு "A" வகுப்பு வழங்க கோரி சகோதரர் தாக்கல் செய்த வழக்கு விசாரனைக்கு வந்தது.

டெல்லியை சேர்ந்த திரிபுவன் குமார் திவாரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு, அதில் "என்னுடைய சகோதரர் திரிபுராரி குமார் திவாரி (எ) மனிஷ் காஷ்யப் பீகாரை சேர்ந்த பிரபல யூடியூபர். இவர் 2018 ஆம் ஆண்டு "Sach Tak News Channel" என்ற யூடியூப் பக்கத்தை உருவாக்கி பீகார் மக்களின் குறைகளையும், ஊழல்களையும் வீடியோவாக பதிவு செய்து யூடியூப் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.

இதுபோன்ற செயல்பாடுகளினால் சமூக வலைதளத்தில் மிகப் பிரபலமான நபராக மாறினார். 2020 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தலில் சன்பதியாவில் போட்டியிட்டு 9239 வாக்குகள் பெற்று 3ஆம் இடம் பிடித்தார். மனிஷ் காஷ்யப் சிவில் இன்ஜினியர் படிப்பு முடித்தவர். 2023 ஆம் ஆண்டு வரை முறையாக வருமான வரி செலுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: வடமாநில தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோ: பீகார் யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீண்டும் கைது!

இந்த நிலையில் மனிஷ் காஷ்யப் பீகார் தொழிலாளிகள் தமிழ்நாட்டில் தாக்குவது போன்ற வீடியோ வெளியிட்ட வழக்கில் முதலில் பீகார் காவல்துறையினர் கைது செய்தனர். பின் மதுரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மதுரை காவல் துறையினர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எனது சகோதரர் மனிஷ் காஷ்யப்பை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மனிஷ் காஷ்யப் மார்ச் 30, 2023 ல் கைது செய்யப்பட்டார். 4 மாதங்களாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இடையில் மதுரை மத்திய சிறையில் அவரை சந்தித்த போது தமிழ் மொழி தெரியாது என்பதால் இங்கு பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக என்னிடம் தெரிவித்தார்.

மேலும் சிறு வயதில் இருந்து மனிஷ் காஷ்யப்புக்கு புகை பிடிக்கும் பழக்கம் இல்லை என்றதால் சிறையில் உள்ளவர்கள் தொடர்ந்து புகை பிடிப்பது மனதளவிலும் உடலளவிலும் பிரச்சனை ஏற்படுவதாக தெரிவித்தார்.
மேலும் எனது சகோதரர் மனிஷ் காஷ்யப்புக்கு சிறையில் "A" வகுப்பு வழங்க வேண்டும் என மனு செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

எனவே, நான் சிறை துறைக்கு அனுப்பிய மனுவை பரிசீலனை செய்து மனிஷ் காஷ்யப் மதுரை மத்திய சிறையில் "A" வகுப்பு வழங்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் மற்றும் நீதிபதி எம்.நிர்மல்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, தமிழ்நாடு அரசு தரப்பில், மனுதாரரின் சிறையில் "A" வகுப்பு வேண்டிய மனு பரிசீலனை செய்து நிராகரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், மனிஷ் காஷ்யப் மீது கடுமையான குற்றச்சாட்டு உள்ளதால் அரசு தரப்பில் மனு பரிசீலனை செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.மனுதாரர் தரப்பில், மனுவை திரும்ப பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: 490 சவரன் தங்க நகை மோசடி:2 பெண்கள் உட்பட 3 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.