ETV Bharat / state

கலைமாமணி விருதுக்கு நிபுணர் குழு அமைக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு - கலைமாமணி விருதுக்கு நிபுணர் குழு கோரிய வழக்கு ஒத்திவைப்பு

மதுரை: கலைமாமணி விருதுகள் வழங்குவது தொடர்பாக நிபுணர் குழுவை அமைக்கக் கோரி வழக்கில், தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சாரத்துறை இயக்குநர், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற உறுப்பினர் - செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை ஒத்திவைத்தது.

Madurai  High Court bench adjourned the case seeking the formation of an expert panel on the Kalaimamani Awards

author img

By

Published : Feb 23, 2021, 5:02 PM IST

தூத்துக்குடி ஆறுமுகநேரியைச் சேர்ந்த சேர்மதுரை என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

மாவட்ட அளவில் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு கலைஇளமணி விருதும் 19 முதல் 35 வயதுடையவர்களுக்கு கலை வளர்மணி விருதும், 36 முதல் 50 வயதுடையவர்களுக்கு கலைசுடர்மணி விருதும், 51 முதல் 60 வயது உடையவர்கள் கலைநன்மணி விருதும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கலைமுதுமணி விருதும் வழங்கப்படுகிறது.

கலைமாமணி விருதுகளுக்கு பரிந்துரை வழங்க உரிய காலவரம்பு விதிக்கப்படவில்லை. இவை குறித்து, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் பல்வேறு கலைகளிலும், கலைமாமணி விருதுக்கான விண்ணப்பங்களைப் பெற்று பரிசீலிக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு கலைமாமணி விருதுகள் அவசர அவசரமாக வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, கலைமாமணி விருதுகள் வழங்குவது தொடர்பாக விதிகளையும், நிபுணர் குழுவையும் அமைக்க அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அமர்வு, இது குறித்து தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சாரத்துறை இயக்குநர், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற உறுப்பினர் - செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.