பாண்டிச்சேரியைச் சேர்ந்த தீபக் பி. நம்பியார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், 'திருச்சி மாவட்ட வன அலுவலர் தலைமையில் திருச்சி எம்.ஆர். பாளையம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் நடத்தப்பட்டு வருகிறது. 2009ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டுவரும் இந்த யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு மத்திய அரசிடம் முறையாக அனுமதி பெறவில்லை.
அந்த அடிப்படையில் திருச்சி எம்.ஆர். பாளையத்தில் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறது. ஒரு வேளை தமிழ்நாடு அரசு யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை நடத்த விரும்பினாலும் மத்திய அரசிடம் முறையாக அனுமதி பெற வேண்டும்.
ஆனால், அவ்வாறு எந்த அனுமதியும் பெறாமல் நடத்தப்படுகிறது. இந்த மையத்தில் தற்போது ஐந்து யானைகள் உள்ளன. சட்டவிரோதமாக திருச்சியில் இயங்கிவரும், யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் உள்ள யானைகளை அந்த நபர்களிடமே மீண்டும் வழங்கவும், உரிய அனுமதி பெறும்வரை திருச்சி எம்.ஆர். பாளையம் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை மூடவும் உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரவீந்திரன் இதுகுறித்து மத்திய உயிரியல் பூங்கா அலுவலர், தமிழ்நாடு முதன்மை வனப்பாதுகாவலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:
'குறைந்தபட்ச உரிமையை கேட்பதே தவறென்றால் இது ஜனநாயக நாடாக இருக்க முடியாது' - பா. இரஞ்சித்