ETV Bharat / state

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு! - செயலர்

மதுரை: மருத்துவ சேவை தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பானைக்கு இடைக்கால தடை கோரிய வழக்கு தொடர்பாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர் பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai hc
author img

By

Published : Sep 13, 2019, 7:59 PM IST

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த ஜெயராணி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"பிறக்கும்போது உடல்நலக் குறைவோடு பிறக்கும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவிற்கு, 520 செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மருத்துவ சேவை தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது.

நான் இதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்து எழுத்து தேர்வு எழுதினேன். நூற்றுக்கு 62 மதிப்பெண் பெற்று , ஏழாவது இடத்தில் தேர்வு பெற்றேன். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர் . அதில் என் பெயர் இல்லை. விசாரித்து பார்த்ததில் உடல்நலக்குறைவோடு பிறக்கும் குழந்தைகள் பாதுகாப்பில், மூன்று வருடம் பணி புரிந்ததற்கான சான்றிதழை அந்தந்த மாவட்ட சுகாதாரத் துறையின் இணை இயக்குனரிடம் சான்றொப்பம் (Attested) பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

அதனை ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின்போது அதை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறினர். நான் கோவையில் உள்ள சுகாதாரத் துறை இணை இயக்குனரை சந்தித்து கேட்டபோது அவர் சான்றிதழ் சான்றொப்பம் வழங்கவில்லை. வழங்கக்கூடாது என அறிவுறுத்தப் பட்டுள்ளதாக கூறினார்.

இதைத் தொடர்ந்து சுகாதாரத் துறையின் இணை இயக்குரின் சான்றொப்பம் பெறாத அனுபவ சான்றிதழ்களை சமர்பித்தேன். நான் உரிய கல்வி தகுதியுடன் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றும், ஒப்புதல் பெற்ற அனுபவ சான்றிதழை இணைக்கவில்லை என்பதற்காக என்னை சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு அழைக்கவில்லை. போதிய அனுபவம் இருந்தும், என் பெயர் தேர்வு பட்டியலில் இடம் பெறவில்லை.

சான்றிதழ் சரி பார்ப்புக்கும் அழைக்கவில்லை. இது விதிகளுக்கு புறம்பானது, கூடுதல் மதிப்பெண் பெற்று எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். எனவே, பிறக்கும்போது உடல்நலக்குறைவோடு பிறக்கும் குழந்தைகள் பாதுகாப்பு (SNCU) பிரிவிற்கு, 520 செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட்ட மருத்துவ சேவை தேர்வு வாரியம் (MSRB) வெளியிட்ட அறிவிப்பானைக்கு இடைக்கால தடை விதித்து, என்னை பணியில் சேர்க்க பரிந்துரைக்க வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேலுமணி, இது குறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர், மருத்துவ சேவை தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Intro:உடல்நலக்குறைவோடு பிறக்கும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் 520 செவிலியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக மருத்துவ சேவை தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பானைக்கு இடைக்கால தடை கோரிய வழக்கு.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு .Body:உடல்நலக்குறைவோடு பிறக்கும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் 520 செவிலியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக மருத்துவ சேவை தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பானைக்கு இடைக்கால தடை கோரிய வழக்கு.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு .

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த ஜெயராணி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," பிறக்கும்போது உடல்நலக்குறைவோடு பிறக்கும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவிற்கு 520 செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மருத்துவ சேவை தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது.
நான் இதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்து எழுத்து தேர்வு எழுதினேன். நூற்றுக்கு 62 மதிப்பெண் பெற்று , ஏழாவது இடத்தில் தேர்வு பெற்றேன். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ம் தேதி தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர் .
அதில் என் பெயர் இல்லை. விசாரித்து பார்த்ததில் உடல்நலக்குறைவோடு பிறக்கும் குழந்தைகள் பாதுகாப்பில் மூன்று வருடம் பணி புரிந்ததற்கான சான்றிதழை அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறையின் இணை இயக்குனரிடம் சான்றோப்பம் (Attested) பெற்று சமர்ப்பிக்க வேண்டும். அதனை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போதே பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின் போது அதை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறினர்.
நான் கோவையில் உள்ள சுகாதாரத்துறை இணை இயக்குனரை சந்தித்து கேட்டபோது அவர் சான்றிதழ் சான்றொப்பம் வழங்கவில்லை . வழங்கக்கூடாது என அறிவுறுத்தப் பட்டுள்ளதாக கூறினார்.
இதை தொடர்ந்து சுகாதாரத்துறையின் இணை இயக்குரின் சான்றொப்பம் பெறாதா அனுபவ சான்றிதழ்களை சமர்பித்தேன்
நான் உரிய கல்வி தகுதியுடன் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றும், ஒப்புதல் பெற்ற அனுபவ சான்றிதழை இணைக்க வில்லை என்பதற்காக என்னை சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு அழைக்க வில்லை. போதிய அனுபவம் இருந்தும், என் பெயர் தேர்வு பட்டியலில் இடம் பெறவில்லை.
சான்றிதழ் சரி பார்ப்புக்கும் அழைக்கவில்லை. இது விதிகளுக்கு புறம்பானது. கூடுதல் மதிப்பெண் பெற்று எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன்.
எனவே, பிறக்கும்போது உடல்நலக்குறைவோடு பிறக்கும் குழந்தைகள் பாதுகாப்பு (SNCU) பிரிவிற்கு 520 செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்ப மருத்துவ. சேவை தேர்வு வாரியம் (MSRB) வெளியிட்ட அறிவிப்பானைக்கு இடைக்கால தடை விதித்து, என்னை பணியில் சேர்க்க பரிந்துரைக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேலுமணி இது குறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர், மருத்துவ சேவை தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.