ETV Bharat / state

'ராஜேந்திர பாலாஜியின் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை ஏன் தொடரக்கூடாது?' - நீதிமன்றம் கேள்வி - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக் குவிப்பு வழக்கு

மதுரை: வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையை ஏன் மேற்கொண்டு தொடரக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை கேள்வியெழுப்பியுள்ளது.

madurai hc bench
madurai hc bench
author img

By

Published : Dec 13, 2019, 11:43 PM IST

இது தொடர்பாக மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், 'அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி 2011 முதல் 2013 வரை வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது தொடர்பாக ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தார்.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டதில் புகாரில் முகாந்திரம் இல்லை எனத் தெரியவந்ததால் விசாரணை கைவிடப்பட்டது என லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையேற்க மறுத்த நீதிபதிகள், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 1996இல் திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவராக பதவி வகித்தது முதல் தற்போது வரை அவருடைய வருமானம், சொத்துகள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டிருந்தனர்.

அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் சார்பிலும் தமிழ்நாடு பொதுத் துறை செயலர் சார்பிலும் சீலிட்ட கவரில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில்,'விசாரணையின் அடிப்படையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டது' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையின் அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய பொதுத் துறை செயலருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணைய ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தனர்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் குறிப்பிட்ட காலத்தில், அவருக்கு சொத்து மதிப்பு குறிப்பிட்ட அளவைவிட எட்டு விழுக்காடுதான் அதிகமாக உள்ளது என லஞ்ச ஒழிப்புத் துறை பதில் மனு அளித்தது.

இதையடுத்து முதல்கட்ட விசாரணை அடிப்படையில் வழக்கை முடிக்கலமா? ஏன் விசாரணயை மேற்கொண்டு தொடரக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பி வழக்கை ஜனவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படியுங்க:

திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்கலாம் - உயர் நீதிமன்றம்

Intro:வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் முதல் கட்ட விசாரணை அடிப்படையில் வழக்கை முடிக்கலாமா?ஏன் விசாரணையை மேற்கொண்டு தொடர கூடாது- நீதிபதிகள் கேள்வி எழுப்பி வழக்கை ஜனவரி 23 ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.
Body:வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் முதல் கட்ட விசாரணை அடிப்படையில் வழக்கை முடிக்கலாமா?ஏன் விசாரணையை மேற்கொண்டு தொடர கூடாது- நீதிபதிகள் கேள்வி எழுப்பி வழக்கை ஜனவரி 23 ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் முதல் கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் குறிப்பிட்ட காலத்தில், அவருக்கு சொத்து மதிப்பு குறிப்பிட்ட சதவீதம் தான் அதிகமாக உள்ளது-லஞ்ச ஒழிப்பு துறை பதில் மனு.

மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில்,"அமைச்சர் பதவியை பயன்படுத்தி 2011 முதல் 2013 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டதில் புகாரில் முகாந்திரம் இல்லை எனத் தெரியவந்ததால் விசாரணை கைவிடப்பட்டது என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையேற்க மறுத்த நீதிபதிகள், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 1996-ல் திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவராக பதவி வகித்தது முதல் தற்போது வரை அவருடைய வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டிருந்தனர்.அப்போது, லஞ்ச ஒழிப்பு இயக்குநர் சார்பிலும், தமிழக பொதுத்துறை செயலர் சார்பிலும் சீலிட்ட கவரில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.அதில்," விசாரணையின் அடிப்படையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டது" என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின் அனைத்து ஆவணங்களையும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக பொதுத்துறை செயலருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணைய. ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தனர்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன்,ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது,அப்போது லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் குறிப்பிட்ட காலத்தில், அவருக்கு சொத்து மதிப்பு குறிப்பிட்ட அளவை விட 8 சதவீதம் தான் அதிகமாக உள்ளது- லஞ்ச ஒழிப்பு துறை பதில் மனு.
இதையடுத்து முதல் கட்ட விசாரணை அடிப்படையில் வழக்கை முடிகலமா?ஏன் விசாரணயை மேற்கொண்டு தொடர கூடாது- நீதிபதிகள் கேள்வி எழுப்பி வழக்கை ஜனவரி 23 ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.