மதுரை: தேவர் சமுதாயம் என்ற அரசாணையை நடைமுறைப்படுத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் தரப்பில் விரிவான பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், அகமுடையார் இணைந்த 'முக்குலத்தோர்' (Mukkulathor) சமுதாயத்தை 'தேவர்' (Thevar) என்ற பெயரில் அழைப்பது தொடர்பாக கடந்த 11.9.1995-ல் வெளியான அரசாணை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை.
தேவர் சமுதாயம் என அழைக்கப்படாத நிலையில் கள்ளர், அகமுடையார் மற்றும் சேர்வை பிரிவினர் பிற்படுத்தப்பட்ட பிரிவிலும், பிரமலைக்கள்ளர் மற்றும் மறவர் பிரிவினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிலும் உள்ளனர். ஒரே சமுதாயத்தில் பல பிரிவுகளாக உள்ளனர். எனவே, தமிழ்நாடு அரசின் அறிவிப்பாணையை முறையாக அமல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்' என கடந்த 2011ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் இன்று (ஜூலை 22) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவிற்கு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தரப்பில் விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் அம்பேத்கர் உருவப்படத்தை அகற்றுக - பதிவுத்துறை அறிவிப்பு!