ETV Bharat / state

மதுரையில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தம்... காரணம் என்ன?

Madurai Happy Street Cancel: மதுரை அண்ணாநகர் பகுதியில் மாநகராட்சி சார்பாக நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் எதிர்பார்ப்புடன் வந்த ஏராளமானோர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

Madurai Happy Street Cancel
மதுரையில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2023, 1:50 PM IST

Updated : Sep 24, 2023, 2:00 PM IST

Madurai Happy Street cancel

மதுரை: ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மதுரை அண்ணா நகர்ப் பகுதியில் 'WOW MADURAI' என்ற பெயரில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று (செப் 24) மதுரை மாநகராட்சி சார்பில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' (HAPPY STREET) நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த இளைஞர்கள் கூட்டம்

இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி நிர்வாகம் எதிர்பார்த்ததை விட ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் என அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் பெருந்திரளாகப் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக நடிகர் சூரி, தமிழக பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட காவல் துறை ஆணையாளர் மற்றும் மதுரை மாநகராட்சி மேயர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், நடிகர் சூரி மற்றும் அமைச்சர் மூர்த்தி

நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் இருந்ததால் மேடையின் முன்பு செல்வதற்கு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் முண்டியடித்துக் கொண்டிருந்தனர். இதில் சிலர் காவல்துறையின் தடுப்புக் கம்பிகளைத் தாண்டி உள்ளே விழுந்ததால் கூட்ட நெரிசலில் பலருக்கும் காயம் ஏற்பட்டது. மேலும் சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன் மயக்கம் அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு ஒலிபெருக்கி மூலம் வலியுறுத்தி வந்தனர். பாதுகாப்புக்காக 108 ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட போதுமான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படவில்லை.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு WOW MADURAI என்ற பெயரில் நடத்தப்பட்ட HAPPY STREET நிகழ்ச்சி

மேலும், கட்டுக்கடங்காத அளவுக்குக் கூட்டம் நிறைந்து இருந்ததால் காவல் துறையால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதன் காரணமாகப் பெரிதும் எதிர்பார்ப்புடன் வந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

இதையும் படிங்க: நாட்டுப்புற கலைகளை மீட்க முயற்சி : 1000க்கும் மேற்பட்ட மகளிர் ஒயிலாட்டம், வள்ளி கும்மியாட்டம் ஆடி கண்கவர் விருந்து!

Last Updated : Sep 24, 2023, 2:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.