மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ளது வண்ணாம்பாறைப்பட்டி. இங்குள்ள ஊரணியில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு முதலை இருப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்குத் தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து வனவர் கம்பக்கொடியான் தலைமையில், வந்த வனத்துறையினர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தேடியும் முதலை சிக்காததால், மீண்டும் முதலையைப் பார்த்தால் தகவல் தெரிவிக்கும்படி கிராம மக்களிடம் தெரிவித்துவிட்டுச் சென்று விட்டனர்.
![madurai forest officers rescued a crocodile_which had fallen to well_](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-03-crocodile-well-forest-script-7208110_07062020200545_0706f_1591540545_744.png)
இதையும் படிங்க: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கரோனா குறித்து இணைய வகுப்புகள் அறிமுகம்!