மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள மலர் சந்தையில், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்தும் பூ விற்பனைக்கு வருகின்றது.
குறிப்பாக இப்பகுதிகளில் விளையும் மல்லிகைப் பூ தனிச் சிறப்புமிக்கவை. ஆகையால் மதுரை மல்லிகை பிற மாவட்டங்கள் மட்டுமன்றி பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றது.
ஆடி முதல் வெள்ளி - விலை உயரும் மதுரை மல்லி
கரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாடு அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு தற்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தப்பட்டுவரும் நிலையில், மதுரை மலர் சந்தையிலும் பூ விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
மதுரை மல்லிகை ரூ.500, அரளி ரூ.300, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.150, பிச்சி ரூ.300, முல்லை ரூ.250 மற்றும் பல்வேறு வண்ணப் பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாட்டுத்தாவணி மலர் சந்தை சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், "நாளை மறுநாள் (ஜூலை 23) ஆடி முதல் வெள்ளி என்பதால் இந்த விலையேற்றம். இது அடுத்தடுத்து மேலும் சில நாள்களுக்கு விலை உயர்வு நீடிக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.
இதையும் படிங்க: மதுரை மல்லிகை கிலோ ரூ.700-க்கு விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி