ETV Bharat / state

மதுரையில் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க கோரிக்கை.. ஆட்சியர் மறுப்பு தெரிவித்ததாக விவசாயிகள் கவலை! - farmers grievance meeting

Madurai Farmers grievance meeting: தண்ணீர் திறக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை வைத்த விவசாயிகளிடம், உரிய பதிலளிக்காமல் வாக்குவாதம் ஏற்படும் வகையில் மதுரை மாவட்ட ஆட்சியர் நடந்து கொண்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

madurai-farmers-grievance-meeting-farmers-protest
குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2023, 10:45 AM IST

குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம்

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று (நவ.24) நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமையில் தொடங்கிய இக்கூட்டத்தில், மேலூர் ஒரு போக பாசனப் பகுதி மற்றும் உசிலம்பட்டி கால்வாய் பகுதிகளில் விவசாயத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் எனக் கூறி, விவசாயிகள் அதிகரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் வந்த பின்பாக உரிய முடிவு அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், மாவட்ட ஆட்சியர் அமைச்சர்களுடனான நிகழ்ச்சிக்குச் சென்று விட்டதால் தாமதமாக வந்துள்ளார். இதனால் விவசாயிகளை அவதிமதித்தாகக் கூறி ஒரு தரப்பினர் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்தனர்.

இதனைத் தொடர்ந்து மூன்று மணி நேரம் தாமதத்திற்கு பின்பாக மாவட்ட ஆட்சியர் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஆட்சியர் சங்கீதவிடம், மேலூர் விவசாயிகள் தங்களது பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தபோது, “தற்போது தண்ணீர் திறந்து விட்டால், டெல்டா பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு போல தண்ணீர் வந்தவுடன், எங்களிடம் நஷ்ட ஈடு கேட்பீர்கள். அதனால் தற்போது தண்ணீரைத் திறந்து விட முடியாது” என ஆட்சியர் கூறியதாக கூறப்படுகிறது.

இதற்கு விவசாயிகள் தண்ணீரைத் திறந்து விடுங்கள், அப்படி ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால் நஷ்ட ஈடு கேட்க மாட்டோம் என கடிதமாக எழுதித் தருகிறோம் எனக் கூறியுள்ளனர். ஆனால், தண்ணிரை திறக்க மட்டோம் என மாவட்ட ஆட்சியர் உறுதியாக கூறி உள்ளார். இதனால் விரக்தி அடைந்த விவசாயிகள் தர்ணா போராட்டத்தைத் தொடங்கினர்.

அப்போது விவசாயி ஒருவர், மேலூர் பகுதிக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி கீழே படுத்து உருண்டபடி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் ஆட்சியர் அலுவலகம் சிறுது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. முன்னதாக, மதுரை மாவட்டம் மேலூரில் ஒரு போக பாசனப் பகுதியில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேலாக விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தண்ணீர் திறக்காததால் அந்தப் பகுதி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் தண்ணீர் திறக்க முடியாது எனக் கூறியது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விழுப்புரம் ஆரம்பப் பள்ளியில் திடீர் விசிட் அடித்த ஆட்சியர்..! பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.