மதுரை பாராளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சரர்பில் மாட்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். இந்நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரி ச.நடராஜன் அவர்களிடம் தனது வேட்புமனுவை வெங்கடேசன் இன்று அளித்தார்.
இந்த நிகழ்வின் போது, திமுக சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, திமுக கட்சி பிரமுகர் தளபதி,கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கடேசன், " தோழமை கட்சி தலைவர்களுடன் இணைந்து இன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்துஉள்ளேன். கடந்த தினம் மதுரை பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுது.
அதன் தொடர்ச்சியாக எங்களின் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மதுரை தமிழகத்தின் அடையாளமான நகரம் கடந்த பத்து ஆண்டுகளாக கைவிடப்பட்ட நகரமாக எவ்வித தொழில் வளர்ச்சியும் இன்றி உள்ளது.
மதுரையின் மதுரையின் தொழில் வளர்ச்சிக்கு கல்வி வளர்ச்சிக்கு விவசாய வளர்ச்சிக்கு வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். இதற்கான முழு திட்டவரை உடன் மக்களை சந்தித்து பெருமளவு ஆதரவு பெற்று வெற்றி பெறுவோம்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக செயல்படுமா என்பதை வரும் நாட்களில் அறிந்து கொள்ளலாம்" என்று கூறினார்.