ETV Bharat / state

மதுரை கோட்ட பெண் ரயில்வே ஊழியருக்கு சாரண, சாரணிய சம்மேளனம் விருது! - இந்திய சாரண சாரணிய சம்மேளனம் விருது

மதுரை ரயில்வே கோட்டத்தில் (Madurai Division SR) விருதுநகர் ரயில் நிலையத்தில் பணியாற்றும் பெண் ஊழியருக்கு இந்திய சாரண சாரணிய சம்மேளனம் விருது (Railway Woman Scout Award) வழங்கி மரியாதை செய்யப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 31, 2023, 9:51 PM IST

மதுரை ரயில்வே கோட்டத்தில் (Madurai Division SR) விருதுநகர் ரயில் நிலையத்தில் பணியாற்றும் பெண் ஊழியருக்கு இந்திய சாரண சாரணிய சம்மேளனம் விருது (Railway Woman Scout Award) வழங்கி இன்று (ஜன.31) மரியாதை செய்துள்ளது.

மதுரை ரயில்வே கோட்டத்திற்கு (Madurai Division SR) உட்பட்ட விருதுநகர் ரயில் நிலையத்தில் எஸ்.மாரீஸ்வரி ரயில்வே மின்சார பிரிவில் தொழில்நுட்ப ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவர் சாரண இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றி விருதுநகரில் கலாம் கல்பனா சாவ்லா சாரணர், சாரணியர் குழு (Kalam Kalpana Chawla Scout in Virudhunagar) நடத்தி வருகிறார்.

விருதுநகர் ரயில் நிலையத்தில் பணியாற்றும் பெண் ஊழியருக்கு இந்திய சாரண சாரணிய சம்மேளனம் விருது

தங்கள் குழு ஆற்றும் சமூக சேவை பணிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்தியாவில் 2022ஆம் ஆண்டிற்கான இளைஞர் விருதுகளுக்கு தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி, அஸ்ஸாம், ராஜஸ்தான், அருணாச்சலப் பிரதேஷ் ஆகியப்பகுதிகளில் இருந்து 9 பேரை தேர்வு செய்தது இந்திய சாரண, சாரணிய சம்மேளனம்.

மதுரை கோட்டத்தைச் சேர்ந்த ரயில்வே பெண் ஊழியருக்கு விருது

ராஜஸ்தான் மாநிலம், பாலி மார்வாரில் நடைபெற்ற சாரண சாரணியர் விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விருதுநகர் மாரீஸ்வரிக்கு இளைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மாரீஸ்வரி விருது மற்றும் சான்றிதழுடன் கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் ரதிப்பிரியா, கோட்ட ஊழியர் நல அதிகாரி டி. சங்கரன், உதவி ஊழியர் நல அதிகாரி இசக்கி ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: விமானத்தில் மது போதையில் அரை நிர்வாணத்துடன் பெண் பயணி ரகளை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.