ETV Bharat / state

ஸ்பாஞ்ச் சிட்டி கன்ஸ்ட்ரக்சன்: ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு - அதிக வெள்ளம் மற்றும் வறட்சி

அதிக வெள்ளம், வறட்சியைக் கையாளும் வகையில் ஸ்பாஞ்ச் சிட்டி கன்ஸ்ட்ரக்சன் (sponge city construction) முறையை நடைமுறைப்படுத்தக் கோரிய வழக்கு குறித்து, ஒன்றிய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல்செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஸ்பாஞ்ச் சிட்டி கன்ஸ்ட்ரக்சன்
ஸ்பாஞ்ச் சிட்டி கன்ஸ்ட்ரக்சன்
author img

By

Published : Nov 23, 2021, 9:03 AM IST

மதுரை: மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினைத் தாக்கல்செய்தார்.

அதில், "தமிழ்நாட்டில் மொத்தம் 39 ஆயிரம் நீர்நிலைகள் உள்ளன. இவற்றில் ஐம்பது விழுக்காடு நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கண்மாய்கள் முறையாகச் சர்வே செய்யப்பட்டதில்லை. அரசும் நீர்நிலைகளில் ஏராளமான கட்டடங்களைக் கட்டியுள்ளது.

அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை

இதன் காரணமாகவே மழைக்காலங்களில் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது. அரசு அதற்கான முறையான நடவடிக்கை எதையும் முன்னெடுக்கவில்லை. சீனா உள்ளிட்ட நாடுகளில் ஸ்பாஞ்ச் சிட்டி ரெயின் வாட்டர் சிஸ்டம் (sponge city rainwater system) என்னும் பெயரில் மழை நீர் சேமித்தல், அதற்கான வடிகால் திட்டம் அமைத்தல் போன்றவை முறையாக மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நடைமுறை சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் பின்பற்றப்படுகின்றன. இதனை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக்கோரி அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆகையால் அதிக வெள்ளம், வறட்சியைக் கையாளும் வகையில் இத்திட்ட முறையை நடைமுறைப்படுத்தி, 1950ஆம் ஆண்டு அரசு ஆவணத்தின் அடிப்படையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். தொடர்ந்து நீர்நிலைகளில் கட்டுமானங்களுக்கு பட்டா வழங்கிய அரசு அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவு

இந்த வழக்கை நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று (நவம்பர் 22) விசாரித்தது.

அப்போது பேசிய நீதிபதிகள், "இது மிகப்பெரிய திட்டம். இதற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும். இந்தியா போன்ற பெரிய நாடுகளில் இதுபோன்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமா?

இதுபோன்ற திட்டங்கள் அரசின் கொள்கை ரீதியான முடிவு. ஆகையால் வழக்கு குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல்செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: சாலை மேம்பாட்டு பணிக்காக ரூ.7 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.