நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகக்கூறி 10க்கும் அதிகமான வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் ரவீந்திரன், துரைசுவாமி அமர்வு முன்பாக முறையிட்டனர்.
அப்போது, பல இடங்களில் உரிய தேவையின்றி மறு எண்ணிக்கை நடத்தப்பட்டதாகவும், இருவருக்கு வெற்ற பெற்றதற்கான சான்று அளிக்கப்பட்டதாகவும் வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் இது போன்ற முரண்பாடுகள் உண்மையாயின், அவை தேர்தலின் நோக்கத்தை சிதைக்க செய்யும் என தெரிவித்ததோடு, மதியம் 12.30 மணிக்குள்ளாக சிசிடிவி பதிவுகளை சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதோடு, சிசிடிவி பதிவுகளை தரவிறக்கம் செய்ய தாமதமாவதால் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படிங்க:
உள்கட்டமைப்பு பிரச்னைகளுக்குத் தீர்வு காண நிதித் துறைக்கு ஊக்கம் கொடுக்கும் மத்திய அரசு