ETV Bharat / state

மதுரையில் அதிகரிக்கும் டெங்கு..! மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை..! - today latest news in madurai

Dengue Precautionary Measures in Madurai: மதுரையில் தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்குகாய்ச்சல் காரணமாக மதுரை மாநகராட்சியின் சுகாதாரத்துறை அலுவலர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Dengue Precautionary Measures in Madurai
மதுரையில் அதிகரிக்கும் டெங்கு - மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 5:49 PM IST

மதுரை: மதுரையில் தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்குகாய்ச்சல் காரணமாக மதுரை மாநகராட்சியின் சுகாதாரத்துறை அலுவலர்கள் அதிரடியாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் டெங்கு கொசு உருவாகும் வகையில் சுகாதார மற்ற முறையில் வளாகங்களை வைத்திருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த வகையில் தற்போது, மதுரை மாநகராட்சி பகுதிகளில் டெங்குகாய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கையாக டெங்குகாய்ச்சல் கொசுக்கள் பரவும் இடத்தை கண்டறிந்து கொசுக்கள் பரவுவதற்குக் காரணமாக உள்ள இடங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மதுரை மண்டலம் 1க்கு உட்பட்ட பகுதிகளில் 94 கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 109 பழைய டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.3,700 அபராதம் விதிக்கப்பட்டது. மண்டலம் 2க்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 38 கடைகளில் ஆய்வு மேற்கொண்டபோது தேவையற்ற 83 டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்காக, ரூபாய் 7,500 அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும், மண்டலம் 3க்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 87 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தேவையற்ற 125 டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூபாய் 4,500 அபராதம் விதிக்கப்பட்டது. மண்டலம் 4க்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 89 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு அங்குத் தேவையற்ற 181 டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதே போல மண்டலம் 5க்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 106 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் 81 டயர்கள் பறிமுதல் செய்த அதிகாரிகள் ரூபாய் 6,500 அபராதம் விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் மொத்தம் 5 மண்டலங்களில் உள்ள 414 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் 579 தேவையற்ற டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தம் ரூபாய் 24,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எங்கேனும் சுகாதாரமற்ற முறையில் இடங்கள் இருப்பது கண்டறியப்பட்டால் மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்படுவதுடன் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னை பெரும் வெள்ளத்தால் பெருகிய குப்பை... கழிவுகளை அகற்றும் தொடர் பணியில் மாநகராட்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.