மதுரையில் கரோனா தொற்றைப் பொறுத்தவரை தற்போது பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவருகிறது. அந்த வகையில் இன்று (செப். 24 ) மட்டும் 69 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று (செப்.24) ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை கரோனா தொற்றின் காரணமாக 16 ஆயிரத்து 175 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 15 ஆயிரத்து 40 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். 381 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது 754 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.