கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மூன்றாம் கட்டமாக சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ள சமயத்தில் நேற்று தமிழ்நாடு அரசு தேநீர் கடைகள் உள்ளிட்ட 32 கடைகள் இயங்க அனுமதியளித்திருந்தது.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் முன்னதாகவே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக, புத்தகக் கடைகள், போட்டோ ஸ்டுடியோ, நோட்டுப் புத்தக உற்பத்தி நிறுவனங்கள், பேப்பர் மொத்த வணிகம், பாத்திரக் கடை, எழுதுபொருள் விற்பனைக் கடைகள், போர்வெல் இயந்திர செயல்பாடு உள்ளிட்டவையும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவுபடி, முடிதிருத்தும் நிலையங்கள் ஸ்பா மற்றும் அழகு நிலையங்கள் இயங்க அனுமதிக்கப்படவில்லை.
தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்பட்ட மேற்கூறிய கடைகள், நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதையும், தகுந்த இடைவெளியை பின்பற்றுவதையும், பணியின்போது கிருமி நாசினி உபயோகத்தை கட்டாயப்படுத்துவதையும், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து உறுதிப்படுத்துவதையும் தீவிரமாகக் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பட்டியலிடப்பட்டுள்ள கடைகளின் உரிமையாளர்கள், குளிர் சாதன வசதி இருந்தால் அதனை இயக்கக்கூடாது எனவும், மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கடைகள் திறக்க அனுமதி!