உலகப் பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களின் முக்கிய நிகழ்வான சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக விழாக்கள் நடைபெறும் நேரங்களிலும், சுவாமி புறப்பாடு நேரங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.சித்திரைத் திருவிழாவில் நாள்தோறும் சுவாமியும், அம்மனும் சிம்ம வாகனம், அன்ன வாகனம், தங்க குதிரை வாகனம் என எழுந்தருளி கோயில் ஆடி வீதிகளில் பவனி வருகின்றனர்.இந்த நிலையில் ஏழால் நாளான நேற்று (ஏப்.21) அதிகார நந்தி யாளி வாகனத்தில் அம்மன் சுவாமி அருட் காட்சியளித்தார்.
சொக்கநாத வெண்பா
”என்ன வினை நாயேற்கிருக்குதோ இக்காயத்
தென்னவினை நின் தாள் இயற்றுமோ - என்னவினை
வந்திடுமோ என்றறியேன் வந்தாலும் நின் அருளே
தந்திடுவாய் சொக்கநாதா”
இதையும் படிங்க:
கருணை கொலை செய்ய அனுமதி தாருங்கள்: மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கரகாட்ட கலைஞர்கள்!