மதுரை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் குழந்தை திருமணம் நடைபெறுவதாகப் புகார்கள் வருவதை அடுத்து மதுரை மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், அதிகபட்சமாக உசிலம்பட்டி பகுதியில் மட்டும் 13 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் மதுரை மாவட்டம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை கரோனா ஊரடங்கு காலங்களில் நடைபெற இருந்த 33 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
மேலும் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகின்ற அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். குழந்தை திருமணம் தொடர்பாக 1098 என்ற தொலைபேசி எண்ணுக்குப் புகார் அளிக்கலாம். குழந்தைகள் நலத் துறை சார்பாக பெற்றோர்களுக்குத் தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுவருகின்றன எனக் கூறினார்.