மதுரையை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,"கடந்த 2019ஆம் ஆண்டு மதுரை ஆவினில் மூத்த தொழிற்சாலை உதவியாளர் பணிக்காக 30 காலி இடங்களுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. எவ்வித அறிவிப்புமின்றி காலி பணியிடங்களை 30லிருந்து 62ஆக உயர்த்தி, காலி பணிகளுக்கு எழுத்து தேர்வு கடந்த நவம்பர் 22ஆம் தேதி நடைபெற்றது.
இதுவரை தேர்வுக்கான கீ ஆன்சரை வெளியிடவில்லை. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலையும் வெளியிடவில்லை. நேர்முக தேர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியலை வெளியிடாமல், நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் பெரும்பாலானோருக்கு எழுத்து தேர்வுக்கான ஹால் டிக்கெட் கிடைக்கப்பெறவில்லை.
இதையடுத்து ஆவின் நிர்வாகம் காலி பணியிடங்களுக்கான எண்ணிக்கையை எவ்வித முன்னறிவிப்புமின்றி அதிகரித்துள்ளது. இது ஏற்கத்தகதல்ல. எனவே எவ்வித முன்னறிவிப்புமின்றி 30 காலி பணியிடங்களிலிருந்து அதனை 62ஆக உயர்த்தி எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு நடத்தப்பட்டதை ரத்து செய்து, காலி பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை விதிக்கவேண்டும். எழுத்துத் தேர்வின் கீ ஆன்சரை வெளியிட உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று, நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆவின் நிர்வாகம் தரப்பில் எழுத்துத் தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியிட வேண்டும். தொடர்ந்து எழுத்து தேர்வின் முடிவுகளை வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதையும் படிங்க: ஆவின் தேர்தலை நடத்தாமலேயே சிலர் தேர்வு: அதிமுக முன்னாள் அவைத்தலைவர் கண்டனம்