ETV Bharat / state

750 லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்ல அனுமதி - குமரி ஆட்சியர் உத்தரவுக்கு எதிரான வழக்கில் திருப்பம்! - today latest news

Case related to ban on minerals in 10 wheeler lorry: 10 சக்கர வாகனத்தில் கனிமங்களை கேரளா மாநிலத்திற்கு எடுத்துச் செல்ல கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் விதித்த தடையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், நாளொன்றுக்கு 750 லாரிகளில் கனிமங்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

case related to ban on minerals in 10 wheeler
10 சக்கர வாகனத்தில் கனிமங்களை கொண்டு செல்ல தடை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு - 750 லாரிகளில் கனிமங்களை எடுத்துச் செல்ல அனுமதி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 3:35 PM IST

மதுரை: கன்னியாகுமரி மாவட்டம், இளஞ்சிறையைச் சேர்ந்த பினோய் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடக்கும் அரசு மற்றும் தனியார் பணிகளுக்கு கிராவல், ஜல்லிக் கற்கள், எம் சாண்ட் குவாரி தூசி மற்றும் மணல் விநியோகம் செய்யும் ஒப்பந்தம் பெற்றுள்ளோம். கேரளாவில் கனிமங்கள் எடுக்க அனுமதி இல்லை. இதனால் ஜிஎஸ்டி நடை சீட்டு உள்ளிட்ட உரிய அனுமதியுடன் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்கு கனிமங்கள் கொண்டு செல்கிறோம்.

இந்த நிலையில், தற்போது கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை வழியாக 10 சக்கரத்திற்கு மேல் உள்ள வாகனங்களில் கனிமங்கள் கொண்டு செல்ல தடை விதித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால், தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு 10 சக்கரத்திற்கு அதிகமான லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்ல முடியவில்லை.

மேலும், இத்தகைய காரணங்களால் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பலவகையான கட்டுமானப் பணிகளும் பாதித்துள்ளன. எனவே, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவு சட்ட விரோதம் என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் புகழ் காந்தி ஆஜராகி, மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு விதிமுறைகளுக்கு முரணாக உள்ளது என்றும், எனவே இதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.

இதனைப் பதிவு செய்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, 10 சக்கரத்திற்கு மேற்பட்ட 750 லாரிகளில் தினமும் கனிமங்கள் கொண்டு செல்லலாம் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: "அரசு ஊழியர்கள் கட்சி ஊழியராக செயல்படக் கூடாது" - சென்னை உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.