ETV Bharat / state

பெரியார் சிலை சேதம் விவகாரம்; அர்ஜூன் சம்பத் மனு தள்ளுபடி! - சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை

Periyar Statue Damage Case: திருச்சி ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது எனக் கூறி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

Periyar Statue Damage Case
பெரியார் சிலை சேதம் செய்யப்பட்ட விவகாரம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 8:23 AM IST

மதுரை: திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே, கடந்த 2006ஆம் ஆண்டு பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்தியது தொடர்பாக, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட பலர் மீது திருச்சி ஸ்ரீரங்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

தற்போது இந்த வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய ஒருவர் இறந்து விட்டார். இதனையடுத்து, பல ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.

தற்போது வழக்கில் தொடர்புடைய அர்ஜுன் சம்பத் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “என் மீதான எந்த ஆதாரமும் இல்லாமல், அனுமானத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்டு அலைக்கழிக்கும் வகையில் விசாரணை தாமதமாக நடைபெற்று வருகிறது. என் மீது பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்து, கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், ‘பெரியார் சிலை சேதப்படுத்தியது குறித்து மனுதாரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது.

இந்த வழக்கு திருச்சி விசாரணை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று, ஏழு சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது’ என வாதத்தை முன்வைத்தார். இதனைப் பதிவு செய்த நீதிபதி, பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது எனக் கூறி அர்ஜுன் சம்பத் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க: தெலங்கானா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது - மும்முனைப் போட்டியில் முந்தப்போவது யார்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.