ETV Bharat / state

யூ-ட்யூப் பல லட்சம் பேருக்கு வேலை வழங்கி உள்ளது; அதனை சிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர் - சாட்டை துரைமுருகன் வழக்கில் நீதிமன்றம் - யூடியூபர் சாட்டை துரைமுருகன்

இந்தியாவில் பல லட்சம் பேருக்கு யூ-ட்யூப் வேலை வழங்கி உள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. யூ-ட்யூப் மூலம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதனை பலர் தவறாக உபயோகப்படுத்தி வருகின்றனர் என சாட்டை துரைமுருகன் வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

சாட்டை துரைமுருகன்
சாட்டை துரைமுருகன்
author img

By

Published : Mar 8, 2022, 3:57 PM IST

மதுரை: சாட்டை துரைமுருகன் யூ-ட்யூப்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தும் அவதூறான கருத்துகளைப் பேசியும் வீடியோ வெளியிட்டார்.

இதையடுத்து துரைமுருகன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதை விசாரணை செய்த நீதிமன்றம், சாட்டை துரைமுருகனிடமிருந்து 'இனிமேல் இதுபோன்ற அவதூறுகளைப் பரப்பமாட்டேன்' என உறுதிமொழி பத்திரம் பெற்றுக்கொண்டு அவரை நிபந்தனை பிணை விடுதலை செய்தது.

வழக்கு ஒத்திவைப்பு

இந்நிலையில் சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழி உத்தரவாதத்தை மீறி முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாக அவர் மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்தபோது யூ-ட்யூப்பில் தேவையற்ற பதிவுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அரசிடம் என்ன திட்டம் உள்ளது? அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? அரசுத்தரப்பில் பதில் அளிக்கவும், யூ-ட்யூப் சம்பந்தமான விவரங்களைச் சேகரித்து நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் இந்த வழக்கு இன்று (மார்ச் 8) நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்தியாவில் பல லட்சம் பேருக்கு யூ-ட்யூப் வேலை வழங்கி உள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

யூ-ட்யூப் மூலம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதனைப் பலர் தவறாக உபயோகப்படுத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமனம் செய்த வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் யூ-ட்யூப் குறித்த விவரங்களை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: அடிமைத்தனத்தைத் தகர்த்தெறியும் வலிமைமிகு போர்க்குரல் பெண்களே - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.